கல்வியே பெரும் சொத்து

கடந்த காலங்களில் எமது தமிழ் மக்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இவ்வாறான இழப்புக்களைச் சந்தித்த தமிழினம் இன்று ஓரளவேனும் மூச்சுக் காற்று விட்டு உயிர் வாழக் காரணம் எமது மக்களிடம் மிஞ்சியிருந்த கல்விச் செல்வமாகும்.எனவே எமது சமூகம் எதிர் காலத்தில் சகல துறைகளிலும் பிரகாசித்து பலம்பெற வேண்டுமாயின் எமது நாளைய சந்ததிக்கு கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும் அறநெறிப் பண்புகளையும் சமாந்தரமாக வழங்க யாவரும் ஒன்றுபட்டு சமூக சிந்தையுடன் உழைக்க வேண்டும்.

இவ்வாறு கமு/சது/நாவிதன்வெளி-அன்னமலை தேசியப் பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கன் குறிப்பிட்டார்.

"உழைப்போம் பிறருக்கு உதவுவோம்"என்பதை தாரகை மந்திரமாகக் கொண்டு சமூக நலப் பணியாற்றி வரும் தமிழ் ஒப் லங்கா (Tamil Of Lanka) உதவும் கரங்கள் அமைப்பு தனது 1967ஆவது சமூக நலப் பணியாக சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்டப் பிரதேசப் பாடசாலையான கமு/சது/குடியிருப்புமுனை சண்முகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட கழுத்துப் பட்டி என்பவற்றை அன்பளிப்புச் செய்தனர்.

இப் பாடசாலை அதிபர் இ.முரளிதரன் தலைமையில் 12 03. 2022 ஆந் திகதி இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இவ் அமைப்பின் தலைவர் சந்திரசேகரம்.இளந்தீபனும். இவ் அமைப்பின் இணைப்பாளர் சௌ.குமார். உறுப்பினர் ஞா.தயாளன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த அதிபர் சீ.பாலசிங்கன் அங்கு மேலும் பேசுகையில்.........
வறுமை என்ற சொல்லை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் 304 உறுப்பினர்களுடன் இளந்தீபனை இலங்கைக்கான இணைப்பாளராகக் கொண்டு இயங்கும் இவ் அமைப்பினர் தமது உழைப்பின் ஒரு பகுதி சமூகப் பணிக்காக தியாகம் செய்வது உயரிய பணியாகும்.

இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோணா சூழ்நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் இணைய வழி கற்றலுக்காக விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கின்றனர். இவர்களுள் சிலர் தேவையற்ற விடயங்களை அழுத்தி சீர் கெட்ட செயலில் ஈடுபடுகின்றனர். அதிக பணத்தை வீண் விரையம் செய்கின்றனர். மேலும் போதைப் பொருள் பாவனையிலும் ஈடுபடுகின்றனர்.இவ் விடயம் குறித்து பெற்ரோர் அவதானமாக இருக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் அதிபரும் ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா இவ் அமைப்பு வடக்கு கிழக்கு மலையகம் போன்ற இடங்களில் மூன்று வருட காலமாக மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார். அனைத்து மாணவர்ளுக்கும் பகல் போசன விருந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வியே பெரும் சொத்து

ஏ.எல் எம். சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House