
posted 9th March 2022
வடமராட்சி கரணவாய் கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம் கல்வியே கண் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு....!
கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம் கல்வியே கண் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கலைவாணி சனசமூக நிலைய கலைரங்கில் இடம் பெற்றது.
கலைவாணி சனசமூக நிலைய தலைவர் தி.திருஞானசேகரம் தலமையில் பிற்பகல் 5:00 மணிக்கு ஆரம்பமானது.
ஆலய முன்றலில் இருந்து பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அரங்கு வரை அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது
மங்கல விளக்குகளை யா.தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் ச. செல்வானந்தம், கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை அதிபர் அ. பவானந்தன், கரவெட்டி சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் C.S ஜபார், பருத்தித்துறை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.யோ. பரமேஸ்வரி, கலைவாணி சனசமூக நிலைய முன்னாள் தலைவர்களான க.தங்கவேல், மு. நடேசன் ஆகியோர் உட்பட பலரும். ஏற்றிவைத்ததுடன் இறைவணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன.
தொடர்ந்து வரவேற்பு உரை, தலமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து கருத்துக்களை கரவெட்டி பிரதேச செயலர் ஈ.,தயாரூபன், உட்பட்ட சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர். இதில் கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம், றேன்சஸ் விளையாட்டு கழகம் நி்ர்வாகிகள், உறுப்பினர்கள், கொற்றாவத்தை கிராம மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்கள், க.பொ.த உயர்தரத்தில் சித்தி எய்தி பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவானவர்கள், க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி எய்தி க.பொ.த. உயர்தர்த்திற்க்கு தகுதி பெற்றோர் என 74 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த கலைவாணி சனசமூக நிலையம் தனது கிராமத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக மயானம் வரையான முழுமையான செலவினை பொறுப்பேற்று செயற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House