
posted 23rd March 2022
கணவன் இல்லாத எனக்கு பிள்ளைகளை படிக்க வைப்பதிலிருந்து எல்லாவற்றுக்கும் கஷ்டமாக இருப்பதால் படகு ஒன்றில் பத்தாயிரம் ரூபா கொடுத்து இந்தியாவுக்கு எனது பிள்ளைகளை அழைத்து வந்துள்ளேன் என்று அகதியாகச் சென்றுள்ள தியோரி என்ற பெண்மணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (22.03.2022) ஒரு படகின் மூலம் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்றடைந்தவர்களில் தியோரி என்ற குடும்ப பெண்மணி தெரிவித்திருப்பதாவது;
நான் மன்னார் சிலாவத்துறை கொக்குப்படையான் என்ற இடத்தைச் சேர்ந்தவள்.
தற்போது இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்து செல்லுகின்றது.
1900 ரூபாவுக்கு விற்கப்பட்ட சமையல் கேஸ் தற்போது நாலாயிரம் ரூபாவுக்கு விலை உயர்ந்துள்ளது.
130 ரூபாவுக்கு இருந்துவந்த ஒரு கிலோ அரிசியின் விலை 230 ரூபாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் இலங்கையில் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது.
அங்கு தற்பொழுது பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து எல்லாவற்றுக்கும் கஷ்டமாக உள்ளது.
எனக்கு கணவர் இல்லை. இரண்டு பிள்ளைகளுடன் மிகவும் கஷ்டமான நிலையிலேயே வாழ்ந்து வந்தேன்.
எனது அம்மா இங்குள்ள வேலூர் குடியாத்தம் முகாமில் உள்ளார். ஏனவே அவரிடம் வந்து சேர வேண்டும் என எனது இரண்டு பிள்ளைகளுடன் வந்துள்ளேன்.
எனது மச்சான் ஒருவர் மூலமாக படகு கட்டணமாக பத்தாயிரம் ரூபா கொடுத்து மன்னார் பேசாலையிலிருந்து புறப்பட்டு வந்தோம்.
ஆனால் படகோட்டிகள் நள்ளிரவு 1.30 மணியளவில் இந்தியாவிலும் இல்லாமல் இலங்கையிலும் இல்லாமல் நடுக்கடலில் ஒரு மணல் திட்டியில் எங்களை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
நாங்கள் இரவு 1.30 மணியிலிருந்து காலை 9 மணிவரை குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருந்தோம்.
அதன் பின்னர் இந்திய கடலோடி காவல் படையினர் எங்களை மீட்டு அழைத்துச் சென்றமையால் நாங்கள் தப்பித்து விட்டோம் என்றார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House