கடல் கடந்து நாடுகளின் வீரர்களுடன் களமாடி வெற்றிவாகை சூடிய  பேசாலை மைந்தனுக்கு பாராட்டு விழா.
கடல் கடந்து நாடுகளின் வீரர்களுடன் களமாடி வெற்றிவாகை சூடிய  பேசாலை மைந்தனுக்கு பாராட்டு விழா.

பூ பந்தாட்ட உள்ளக அரங்கு விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட ரீதியில் மாகாண ரீதியில் தேசிய ரீதியில் இருபது வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று பின் 17.11.2021 தொடக்கம் 26.11.2021 வரை கடல் கடந்து துபாய் நாட்டு விளையாட்டரங்கில் நாடுகளின் வீரர்களுடன் களமாடி முதல் இடத்தை வென்றெடுத்த மன்னார் மாவட்டத்தின் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவரும் மன்.பற்றிமா தேசிய பாடசாலை மாணவனுமாகிய செல்வன் ததேயு சில்வியன் டலிமாவுக்கு கௌரவிப்பு விழா இடம்பெற்றது.

பேசாலை விழிகள் கலா முற்றம் அமைப்பின் எற்பாட்டில் பேசாலையில் 13.03.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை இவ் அமைப்பின் இயக்குனர் தேசியக்; கலைஞர் சாஹிக்கிய எஸ்.ஏ.உதயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் சிறப்பு விருந்தினர்; ஓய்வுநிலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் (டிலாசால் சபை) மன்னார் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் பெ.யூட் றொஹான் குரூஸ் உட்பட பூப்பந்து விளையாட்டு சம்மேளன தலைவர் எம்.பிறின்ஸ் லெம்பேட் மன்னார் பிரதேச செயலக கலாச்சாரா உத்தியோகத்தர் திருமதி ர.தவமதி மன்.பத்திமா தேசிய பாடசாலை பிரதி அதிபர் க.மெரில் குரூஸ் ஆகியோருடன் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கடல் கடந்து நாடுகளின் வீரர்களுடன் களமாடி வெற்றிவாகை சூடிய  பேசாலை மைந்தனுக்கு பாராட்டு விழா.

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House