ஏப்பிரல் 30 தொடக்கம் இலங்கைப் பிரஜை பொது இடங்களில் உலாவுவதற்கு கட்டுப்பாடு

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பிரதேசங்களிலேயே அதிக தொற்றாளர்களும் மரணங்களும் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது, தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். எனினும் கவலைக்கிடமான வகையில் யாழ். மாவட்டத்தில் மூன்றாவது மேலதிக தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை யாழ் மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 25 வீதமானவர் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அறிக்கைகளின்படி கோவிட்-19 வைரஸூடன் பரவும் டெல்டா, ஒமைக்ரோன் பொன்ற திரிபுகளை தடுப்பதற்கும் இந்தப் பெருந்தொற்று நிலவும் காலத்தை குறைப்பதற்கும் கோவிட் தொற்றால் ஏற்படும் கடுமையான நோய்நிலையைத் தடுப்பதற்கும் மற்றும் மரணங்களை குறைப்பதற்கும் தடுப்பூசிகளை உரியகாலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

இந்தத் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின் ஏனைய அனைத்து தடுப்பூசிகளுக்கு ஏற்படுவது போல ஓரிரு நாட்களுக்கு மெல்லிய காய்ச்சல், உடல் வலி என்பன ஏற்படக்கூடும். இந்த அறிகுறிகளை தவிர, இந்தத் தடுப்பூசி மூலம் பெரும் உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஏதும் பதிவாகவில்லை.

மேலும் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதி விசேட வர்த்தமானியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் இலங்கை பிரஜை ஒருவர் இலங்கை முழுவதற்குமான முறையான அதிகாரியால் விலக்கு அளிக்கப்பட்டாலொழிய, கொரோனா முழுமையாக தடுப்பூசி அட்டையின்றி பொது இடத்தில் பிரவேசிக்க முடியாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 30 தொடக்கம் இலங்கைப் பிரஜை பொது இடங்களில் உலாவுவதற்கு கட்டுப்பாடு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House