எல்லை தாண்டிய  இலங்கை மீனவர்கள் கைது

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் பகுதிக்குள், அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன் தினம் புதன்கிழமை இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களின் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை, தூத்துக்குடிக்கு அழைத்துச்சென்ற கடலோர காவல் படையினர், தருவைக்குளம் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

"சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் அரசுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம் தேவை?" - அனந்தி சசிதரன்

இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இன விடுதலைக்காக சுயநிர்ணயத்துக்காகப் போராடியபோது எல்லா நாடுகளின் உதவியுடனும் நாம் அழிக்கப்பட்டும். தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அந்தக் கட்டுப்பாட்டின் கீழ் நாம் வாழ்ந்த வாழ்வை சுய பொருளாதார நிலையில் தன்னிறைவு பொருளாதாரத்தை நாம் அடைந்து இருந்தோம்.

இன்று இலங்கை அரசு, போர் நடக்கும் ரஷ்யாவிடம் கூட பிச்சை எடுக்கின்ற நிலைமையில் காணப்படுகின்றது .

அன்று ஒவ்வொரு மக்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது நாங்கள் விட்ட கண்ணீரும், அவர்கள் விட்ட ஏக்கமும் இன்று இலங்கையை ஒரு நட்டாற்றில் கொண்டு வந்துவிட்டு இருக்கின்றது. இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்த அத்தனைபேரும் இதற்குப் பொறுப்பாளிகள் ஆகவேண்டும் என்றார்.

தொடரும் எரிவாயு வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று நேற்று காலை வெடித்துள்ளது.
எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தும் குடும்பம் ஒன்று வழமைபோன்று சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த அடுப்பு வெடித்துள்ளது.
இந்த சம்பவம்தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதற்கமைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முறைப்பாடு பதிவு செய்தனர்.
எரிவாயு வழங்கும் முகவரிடமும் இது தொடர்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம் தெரிவித்தது.

நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சமையல்எரிவாயு அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டிய  இலங்கை மீனவர்கள் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House