
posted 15th March 2022
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை காரணமாகப் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்த நிலமையால் நாட்டின் பலபாகங்களிலும் உணவகங்கள், தேனீர்க்கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலர் இதனால் தொழிலிழந்து வருமானமின்றிக் கஷ்டமுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வப்போது கிடைக்கப்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முகவர்களிடம் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் முண்டியத்து நீண்ட கியூவரிசைகளில் காத்து நிற்கும் நிலை தொடர்வதுடன், சில சமயம் பல மணிநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் அவலமும் ஏற்பட்டு வருகின்றது.
சில உள்ளுர் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் தாம் பதுக்கி வைத்திருக்கும் சிலிண்டர்களை நிர்ணயிக்கப்பட்ட விலையையும் விடவும் கூடிய விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கையிருப்பு பூச்சியமடைந்துள்ளதாக எரியாவு நிறுவனமான லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடமொன்றின் செய்தி மூலம் அறியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் எரிவாயு சிலிண்டர்கள்டங்கிய இருகப்பல்கள் தரித்துள்ள நிலையிலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் குறித்த நிறவனம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாளாந்தம் 1100 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் அவசியப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
எரிவாயுவுக்கான இன்றைய நாட்டின் இக்கட்டான நிலையிலும் குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினர் பொத்துவில் தொகுதி விநியோகஸ்த்தரின் முன்மாதிரி செயற்பாடு குறித்து பொது மக்கள் பெரும் பாராட்டுக்களையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொத்துவில் தொகுதி விநியோகஸ்த்தரான நிந்தவூர் ஒசாகா லங்கா நிறுவனத்தின் இந்தவாரம் தமக்குக் கிடைத்த சுமார் இரண்டாயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களின் காலடிக்கே சென்று உரிய விலையில் வழங்கி தமது முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒசாகா லங்கா நிறுவனப்பணிப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான ஏ.அலிகான் அவர்களின் திட்டமிடலுடனான மக்கள் சார்ந்த இந்த முன்மாதிரி செயற்பாட்டின்படி பொத்துவில் தொகுதியின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நடமாடும் விற்பனை சேவைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி உட்பட மேலும் சில பிரதேசங்களுக்கும் இந்த நடமாடும் சேவைகள் மூலம் (பொது மக்களுக்கு) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஒசாகா நிறுவனத்தின் இந்த சேவையைப்பலரும் பாராட்டியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House