
posted 9th March 2022
எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று புதன்கிழமை இடம் பெறும் நிலையில் தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்ட வண்டியில் பயணித்ததாக அவர் கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.
இன்றைய தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் போது அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்