எனக்குள்ளே திரைப்படம் வெளியாகிறது!

போராட்டம் நிறைவுக்கு வந்த ஒரு காலப்பகுதியில் இளைஞர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை எமது இனத்தின் பால் இயல்பாகவே உள்ள அக்கறை கொண்ட சமூக விரும்பிகளிடம் இருப்பதையிட்டுப் பெருமை அடைகின்றோம். இந்நிலையில் எமக்கான சினிமாவை வர்த்தக நோக்கின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ளதாக மட்டக்களப்பு சிப்ஸ் சினிமா நிறுவன உரிமையாளரும், எனக்குள்ளே திரைப்படத் தயாரிப்பாளருமான வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தெரிவித்தார்.

சிப்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள எனக்குள்ளே திரைப்படம் தொடர்பாக மட்டு, ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட பல்வேறு சினிமாக்கள் காத்திரமானதாக அமையவில்லை என்ற ஓர் ஆதங்கம் எம்மிடையே இருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக சமூகத்தில் உயர் மட்டத்திலுள்ளவர்கள் அவ்வாறான படைப்புக்களை வெற்றியடையச் செய்வதில் பங்களிப்பினை நல்க வேண்டும் என்ற நோக்கோடு ஒன்றிணைந்து இவ் அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

அந்த அடிப்படையில் இளைஞர்களுக்குப் பொருளாதார அடிப்படையில் வருமானம் ஈட்டக் கூடிய துறையாக சினிமாவை வளர்த்தெடுக்க நாம் எம்மாலான செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

சமூகத்திற்கான செய்தியொன்றைச் சொல்வதற்கான ஊடகமாக சினிமா உள்ளது. அந்தச் செய்தியைச் சொல்வதற்காக எமது முதலாவது திரைப்படமான காரிகாலன் திரைப்படத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்ற விடயத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வெளிக் கொணரப்பட்டது.

அந்தவகையில் தற்போது எனக்குள்ளே என்ற திரைப்படத்தின் ஊடாகவும் சமூகத்துக்கு முக்கிய செய்தியொன்றைக் கூறவிருக்கின்றோம். முக்கியமாக திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில், இந்தியா அதீத வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கின்றது.

இந்நிலையில் தயாரிப்பு, நடிகர், நடிகை, தொழில்நுட்பம், குணச்சித்திரப் பாத்திரங்கள், இசையமைப்பு போன்ற பல்வேறு விடயங்களிலும் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எமக்கான சினிமாவை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

இதற்காக நான் சினிமா கம்பனியொன்றை உருவாக்கியுள்ளேன். அதனூடாக எதிர்காலத்தில் எமக்கான சினிமா புதுப்பொலிவுடன் அரங்கேறும் என்றார் சுகுந்தன்.

இவ்ஊடகச் சந்திப்பில் எனக்குள்ளே திரைப்பட இயக்குனர் குழந்தைவேல் கோடீஸ்வரன், இசையமைப்பாளர் பொறியியலாளர் கேசாந் குலேந்திரன், நடிகர் சி.ஜே. துஜானந், நடிகை திருமதி ஜானு முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது எனக்குள்ளே திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கல்லடி, மாங்காடு, கல்முனை ஆகிய இடங்களிலுள்ள திரையரங்குகளில் பிற்பகல் 1.15, 5.15 காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளதாகவும், இதனைப் பொது மக்கள் வருகை தந்து பார்ப்பதன் மூலம் எமக்கான சினிமா வளம்பெறும் என திரைப்படக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

எனக்குள்ளே திரைப்படம் வெளியாகிறது!

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House