எனக்குள்ளே திரைப்படம்

மட்டக்களப்பின் வர்த்தக சினிமாத் துறையின் புதிய அத்தியாயமாக “எனக்குள்ளே” திரைப்படம் அமைந்துள்ளது. இரு நண்பர்களுக்கிடையிலான பாசப் பிணைப்பு, அதனால் வரும் இன்பம், துன்பம், பிரிவு, உயிரிழப்பு என கதை நகரும் விதம் அருமை. இந்திய சினிமாவிற்கு எங்களாலும் ஈடுகொடுக்க முடியுமென்பதை படத் தயாரிப்பாளரும், மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கு. சுகுணன் மற்றும் படக்குழுவினர் புரிய வைத்திருக்கின்றனர்.

சிப்ஸ் சினிமா நிறுவனத் தயாரிப்பில் உருவான “எனக்குள்ளே” திரைப்படத்துக்கான விஷேட பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான காட்சி கடந்த செவ்வாய்க்கிழமை (15) கல்லடி சுகந்தி திரையரங்கில் காண்பிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் குழந்தைவேல் கோடீஸ்வரன், இசையமைப்பாளர் பொறியியலாளர் கேசாந் குலேந்திரன் மற்றும் நடிகர் நடிகைகளின் அயராத அர்ப்பணிப்பு வெளிப்படுகின்றது.

இத்திரைப்படம் 50 நிமிடங்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தது. இக்கதையில் டாக்டர்களாக நடிக்கும் வைத்திய கலாநிதி கு. சுகுணன் மற்றும் கே. அருளானந்தம் ஆகியோர் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

“உடல் உறுப்பைத் தானம் செய்தல்” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு, உருவாகியுள்ள “எனக்குள்ளே” திரைப்படத்தில் பிரச்சார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதையை நகர்த்திச் செல்வதில் இயக்குனர் குழந்தைவேல் கோடீஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

மாற்றம் என்பது எம்மிலிருந்தே உருவாக வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இத்திரைப்படம் அமைந்திருக்கின்றது. இதில் பங்கேற்ற 16 பேரும் தமது கண்களைத் தானம் செய்வதற்கான சான்றுப் பத்திரம் படத்தின் பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின் போது படத்தயாரிப்பாளரும், விஷேட வைத்திய நிபுணருமான கு. சுகுணனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனக்குள்ளே திரைப்படம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House