எகிறியது நெல்விலை!

இலங்கையின் நெற்களஞ்சியமெனவர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் நெல்லின் நிலை எகிறியுள்ளதால் அரிசிவிலையும் உயர்வடைந்துள்ளது.

இந்த விவசாய மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடை வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையிலேயே நெல்லின் விலையும் அபரிமித உயர்வை அடைந்துள்ளது.

கடந்த சிறுபோக அறுவடையை அடுத்து 66 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் 3500 ரூபா முதல் ஐயாயிரம் ரூபாவுக்கு உட்பட்ட விலையிலேயே விற்பனையாகிய போதிலும்,

இம்முறை பெரும்போக நெல் அறுவடை முடிந்த கையோடு 66 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் 7500ரூபா முதல் 8000 ரூபா வரையும் எகிறி விற்பனையாகின்றது.

மேலும், பெரும்பாலான விவசாயிகள் பெரும்போக நெல்லை உலர்த்தி சேமித்து வைத்துள்ளதால் எதிர்வரும் வாரங்களில் நெல்லின் விலை ஒரு மூடை பத்தாயிரம் ரூபா வரைகூட உயரலாமெனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

இந்த நிலமையால் நெல் உற்பத்தியிலீடுபட்ட விவசாயிகள் வருமானம் பெறும் நிலையிருப்பினும் உணவுக்கு அரிசியை விலைகொடுத்து வாங்கும் சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நாட்டின் இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பஞ்ச நிலைமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் அரிசிவிலையேற்றம் மற்றொரு பேரிடியாக அமைந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அம்பாறை மாவட்த்தில் எதிர்வரும் சிறுபோக நெற்செய்கைக்கான முன்னாயத்த ஆரம்பக் கட்ட உழவு, மற்றும் பண்படுத்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுபோக நெற்செய்கை ஆரம்பக் கூட்டதீர்மானத்தின்படி எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நெல்விதைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் முடிவடைய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குத்தகைக்குப்பெற்று நெற்செய்கை மேற்கொள்ளும் காணிகளுக்கான குத்தகைப் பணத்தொகையும் அதிகரித்துள்ளதுடன் குத்தகைக் காணிகளுக்குப் பெரும்கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. நெல்லின் விலை உயர்வே இவற்றுக்குக் காரணமாகும்.

எகிறியது நெல்விலை!

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House