
posted 16th March 2022
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிப் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தரான மயில்வாகனம் வசந்தன் (வயது -27) தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை(13) வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாவற்கொடிச்சேனை கண்ணகிபுரத்திலிருந்து தனது தாயாரின் வீட்டுக்குச் சென்று பின்னர் தான் தொழிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று தனது தாயாரின் வீட்டில் யாருமில்லாத நிலையில் வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House