
posted 30th March 2022
“முஸ்லிம் காங்கிரஸினதும், சுயநலம் கொண்ட அதன் தலைமையின் பின்னாலும், கிழக்கு முஸ்லிம் மக்கள் இனியும் செல்லக் கூடாது” இவ்வாறு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.
அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள அரசுக்கு எதிரான பேரணி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அறை கூவலை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் தலைவர் அதாவுல்லா மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
“முஸ்லிம் சமூகத்தின் நலனையே நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்றைய தலைமையால் திசை திருப்பப்பட்டு சுயநல அரசியல் இலாபங்களுக்கான கட்சியாக மாறியுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக முஸ்லிம்களின் தளமான கிழக்கு முஸ்லிம்களின் நலன் சாராத, அவர்களது எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்காத கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.
தலைவர் ரவூப் ஹக்கீம் தனது சுயநல அரசியலுக்காகக் கட்சியையும், மக்களையும் பலிக்கடாக்களாக ஆக்கிவருகின்றார்,
ரவூப் ஹக்கீமின் சுயநல அரசியலை நோக்காகக் கொண்டதாகவே நடைபெறவிருக்கும் அரசுக்கு எதிரான பேரணி ஒழுங்கு செய்யப்படுகின்றது.
எனவே கிழக்கு முஸ்லிம் மக்கள் இனியும் ரவூப் ஹக்கீமின் பசப்பு வார்த்தைகளை நம்பி, அவர் பின்னால் செல்லக் கூடாது.
இந்தப் பேரணி கிழக்கில் நடைபெறுவதால் இங்குள்ள மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும்.
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லவா முன்னின்று ஏற்பாடு செய்ய வேண்டும்?
ஆனால் அந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களெவரும் இதற்கான ஏற்பாட்டில் பங்கு கொள்ளவுமில்லை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கிமுடனுமில்லை.
இந்தலட்சணத்தில் தான் அரசுக்கு எதிராகப் பேரணி நடத்தப் போகின்றார். எனவே நம் கிழக்கு முஸ்லிம் மக்கள் இன்றைய அரசியல் சூழலில் மிக அவதானத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட வேண்டும்.
ரவூப் ஹக்கீமின் பின்னால் கிழக்கு முஸ்லிம்கள் இனியும் செல்லக் கூடாது” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House