இந்திய வெளிவிவகார அமைச்சர் – முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் – முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் சந்திப்பு

13ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை, எதிர்காலம் குறித்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்ற விதத்தில் இந்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு, உரிய உத்தரவாதங்களை வழங்கத் தவறிவிட்டது. அத்துடன், தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்திக் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (29), கொழும்பில், இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும்,உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ், முஸ்லிம் மக்களை உள்வாங்கும் விடயமாகும். உத்தியோகபூர்வ அறிக்கைகளில், தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையாள்வதற்கான முஸ்லிம் தரப்பின் கருத்தை இந்திய தரப்பினர் அங்கீகரித்தனர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, முஸ்லிம்களின் அபிலாசைகள் குறித்த விவகாரங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிந்துணர்வுடன் செயற்பட்டது. அதேவேளையில், தமதுகட்சி முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் அக்கறையுடன் மிகவும் நிதானமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதையும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இந்திய உதவியுடன் அமுல்படுத்தப்படும் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டங்களில் ஒலுவில், மூதூர் போன்ற துறைமுகங்களையும் உள்வாங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார விவகாரங்களில் சகல இனங்களும் இந்திய துணைக்கண்டத்துடனும், இலங்கையுடனும் தொடர்புபட்டு வளர்ச்சியடைந்துள்ளன. இதனை மேம்படுத்துவதற்கு சகல சமயங்களையும் உள்ளடக்கிய பயனுள்ள தொடர்பாடல் பொறிமுறையொன்றை இந்தியா முன்னெடுக்கும் என இதன்போது நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் – முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House