ஆலோசனைக்குழு அங்குரார்ப்பணம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் அதன் பொறுப்பதிகாரி எஸ்.எம். சம்சுதீன் தலைமையில் இதற்கான அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கான பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பிரமுகர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நிர்வாகிகள் தெரிவின்போது ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் உப தலைவராகவும், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.எம். றபீக் செயலாளராகவும், அதிபர் எம்.ஐ. சம்சுதீன் உப செயலாளராகவும், ஓய்வுநிலை அரசசேவை உத்தியோகத்தர் எம்.ஐ. மீராலெப்பை பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுடன் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா மௌலவி உள்ளிட்ட சிலரும் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் குழுவின் கீழ் சாய்ந்தமருத்திலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகள் தோறும் உப குழுக்கள் அமைக்கப்படும் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம். சம்சுதீன் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் குற்றச்செயல்களை தடுப்பது, போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல், சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு, நாடுபூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி பொலிஸ் சமூக சேவை ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இக்குழுவில் 10 தொடக்கம் 20 பேர் வரை அங்கம் வகிப்பார்கள். சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற அதேவேளை குற்றச்செயல்களுடன் சம்மந்தப்படாத பிரமுகர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என சுற்றுநிருபத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆலோசனைக்குழு அங்குரார்ப்பணம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House