ஆப‌த்துக்குள் த‌ள்ளிவிட‌ முய‌ற்சி
ஆப‌த்துக்குள் த‌ள்ளிவிட‌ முய‌ற்சி

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கும் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் இடையிலான‌ ச‌ந்திப்பு ந‌ல்லதொரு வாய்ப்பாக‌ இருப்ப‌துட‌ன் முஸ்லிம்க‌ள் ஓட்டுப்பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஓர‌மாய் உட்கார்ந்து கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் வேண்டுமென்றே முஸ்லிம் ச‌முதாய‌த்தை ஆப‌த்துக்குள் த‌ள்ளிவிட‌ முய‌ற்சிக்கின்ற‌ன‌ என்று ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு 2005ம் ஆண்டு ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஜ‌னாதிப‌தி ஆன‌து முத‌ல் அனைத்து தேர்த‌ல்க‌ளிலும் ராஜ‌ப‌க்ஷ‌வை எதிர்த்தும் ஐ தே க‌வின் ஆத‌ர‌வுமாக‌வே செய‌ற்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து. ஆனாலும் க‌ட‌ந்த‌ ஐ தே க‌ த‌லைமையிலான‌ அர‌சுக்கு த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ர் பாராளும‌ன்றில் பெரும் முட்டுக்கொடுத்தும் அவ‌ர்க‌ளால், த‌மிழ் முஸ்லிம் உற‌வை சிதைத்த‌து த‌விர‌ இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வில் ஒரு அடியேனும் முன்னேற‌ முடிய‌வில்லை.

த‌ற்போது ராஜ‌ப‌க்ஷ‌ மூல‌மே த‌ம‌க்குரிய‌தை கொஞ்ச‌மாவ‌து பெற‌ முடியும் என்ற‌ ஞான‌ம் வ‌ந்து ச‌ர்வ‌ க‌ட்சி மாநாட்டில் க‌ல‌ந்து கொண்ட‌துட‌ன் ஜ‌னாதிப‌தியுட‌னும் பேசியுள்ள‌ன‌ர்.

எம்மை பொறுத்த‌வ‌ரை என்ன‌ பிர‌ச்சினைக்கும் ஆயுத‌மோ அர‌சை எதிர்த்து கூச்ச‌லிடுவ‌தோ தீர்வாகாது, மாறாக‌ ஓட்டுக்க‌ள் பெற்ற‌ க‌ட்சிக‌ள் அர‌சுட‌ன் திற‌ந்த ம‌ன‌துட‌ன் பேசுவ‌தாலும், அர‌சுட‌ன் இண‌க்க‌ அர‌சிய‌ல் செய்வ‌தாலுமே சில‌ ந‌ன்மைக‌ளை பெற‌ முடியும்.

யுத்த‌ம் செய்து தோல்வியுற்ற‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் இன்று பேச்சுவார்த்தை மேசைக்கு வ‌ந்த‌ நிலையில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் வ‌ம்புக்கு ஆப்பு இழுத்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. முஸ்லிம் ச‌மூக‌மும் எதிர் கால‌ம் ப‌ற்றி சிந்திக்காது இன்னுமின்னும் இந்த‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் அர‌ச‌ எதிர்ப்பேச்சுக்க‌ளுக்கு பின்னால் இழுப‌ட்டு த‌ம‌து எதிர்கால‌ ச‌மூக‌த்தை ப‌டு குழியில் த‌ள்ளிக்கொண்டிருக்கின்ற‌ன்ற‌ன‌ர்.

ஆக‌வே நாட்டின் அர‌சிய‌ல் க‌ள‌த்தில் உள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் உல‌மா கட்சியின் த‌லைமையில் கூட்ட‌மைப்பாக‌ செய‌ற்ப‌ட்டு அர‌சுட‌ன் ந‌ம‌து பிர‌ச்சினைக‌ளை பேசுவ‌த‌ற்குரிய‌ அழுத்த‌த்தை அக்க‌ட்சிக‌ளுக்கு ம‌க்க‌ள் கொடுக்க‌ வேண்டும். இல்லையேல் சிங்கள‌ ம‌க்க‌ளுட‌ன் புத்தியின்றி முர‌ண் பட்டு நிற்கும் முஸ்லும் ச‌மூக‌ம் நாளை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அது கிடைத்து விட்ட‌து இது கிடைத்து விட்ட‌து என‌ புல‌ம்பிக்கொண்டு த‌மிழ் ச‌மூக‌த்துட‌னும் முர‌ண்ப‌டும் சூழ‌ல் ஏற்ப‌டும் என்ப‌தை எச்ச‌ரிக்கின்றோம்.

ஆப‌த்துக்குள் த‌ள்ளிவிட‌ முய‌ற்சி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House