ஆக்கில் கான் தெரிவு
ஆக்கில் கான் தெரிவு

ஐ.கே. முஹம்மட் ஆக்கில் கான்

இலங்கை சதுரங்க சம்மேளனம் தேசிய ரீதியில் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் Pro Knights Chess Academy சார்பாக பங்குபற்றிய கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் ஐ.கே. முஹம்மட் ஆக்கில் கான் அடுத்த சுற்றான B பிரிவில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொலநறுவை றோயல் கல்லூரியில் கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற இப்போட்டி 07 சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.

வயது வரையறைகள் இன்றி ஆண்களுக்கு தனியாக நடாத்தப்பட்ட இப்போட்டித் தொடரில் சுமார் 40 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல சர்வதேச தரப்படுத்தல் போட்டியாளர்களுடனும் விளையாடியே இவர் அடுத்த சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

இப்போட்டித் தொடருக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் வீரரான இவரை Pro Knight Chess Academy பணிப்பாளர் ஸாக்கீர் அஹமட் பயிற்றுவித்திருந்தார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 07 ஆம் ஆண்டில் கல்வி பயில்கின்ற இம்மாணவன் ஆசிரியர் எம்.கே.இர்ஷாட் கான் மற்றும் எஸ்.தஸ்லீன் ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கில் கான் தெரிவு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House