
posted 17th March 2022

அல்வாய்கணபதி அறக்கட்டளை நிறுவனத்தால் இன்றைய தினம் அதன் அமரத்துவமடைந்த பணிப்பாளர் வைரவநாதன் யசோதரன் பிறந்த நாள் நினைவாக, யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கப்பபட்டுள்ளன.
கணபதி அறக்கட்டளை நிர்வாகி கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் நிதிப்பங்களிப்பில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூபா 15,000 அன்பளிப்பாக இலங்கை வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டும், மற்றும் கற்றல் உபகரணமும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். இதில் 167 புள்ளிகளை பெற்றுக்கொண்ட செல்வன் தனீஸ்குமார் தர்மிகன், 157 புள்ளிகளை பெற்றுக் கொண்ட செல்வி. தீபன் மகிஷா, 155 புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்களான இராசகுமார் பர்மியா, பாலகிருஸ்ணன் அபர்ணா ஆகிய மாணவர்களே கௌரவிக்கப்பட்டதுடன், புலமைப் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக் கொள்ளாத ஆனால் வெட்டுப்புள்ளிக்கு அண்மித்த இரு மாணவர்களும் கற்றல் உபகரணம் வழங்கி கெளரவிக்கும் பட்டனர்.
பாடசாலை அதிபர் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் கணபதி அறக்கட்டளை பணிப்பாளர்கள், நிர்வாகிகள், பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House