
posted 31st March 2022

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
5000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு புதன்கிழமை (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குருநாகல் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் கொபெய்கனே மீகஸ்வௌ பிரதேசத்தில் உள்ள குளத்தின் புனரமைப்பு பணிகள் பிரதமரினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொல்பித்திகம கந்தகொல்ல குளம், பெமினிகல்ல மசுரன்கோட்டே குளம் மற்றும் கிரிபாவ நிக குளம் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அக்குளங்கள் உள்ளிட்ட 5000 குளக்கட்டுகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதிலும் உள்ள 100 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் கௌரவ பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நீரை நம்பித்தான் வாழ்கின்றன. தண்ணீர் நம் வாழ்வின் அடிப்படை. நாம் பின்னோக்கிச் செல்லும்போது உலகில் உள்ள ஒவ்வொரு நாகரீகமும் நீரைக் கொண்டே உருவாகிறது. நம் நாட்டுக்கும் அப்படித்தான். பழங்காலத்திலிருந்தே, இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒவ்வொரு அடியிலும் விவசாயமும் நீர்ப்பாசனமும் பின்னிப்பிணைந்துள்ளன.
அந்தக் காலத்தில் கிராமம், விகாரை, குளம், தாதுகோபம் என்ற கருத்துதான் நமது கலாச்சாரத்தின் அடிப்படையாக இருந்தது. மேம்பட்ட நீர்ப்பாசனத்தின் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே இவை அனைத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.
குளங்கள் மட்டுமின்றி அவற்றுடன் இணைக்கப்பட்ட கால்வாய்களும் நமது பண்டைய முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை. ராட்சத கால்வாய் போல் உலகையே வியக்க வைத்த படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. இத்தகைய மேம்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தைப் பரம்பரையாகப் பெற்றதால்தான் நம் நாட்டில் விவசாயம் காப்பாற்றப்பட்டது.
இவ்வகையில் நம் நாட்டில் விவசாயத்திற்கு ஊட்டமளிக்கும் ஏராளமான குளங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் உள்ளன. ஆனால் அவ்வப்போது இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், உரிய நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் சிலர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். நாம் அறிந்த வரையில் நம் நாட்டில் கிராமப்புற சிறு தொட்டிகள்இ மதகுகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் உள்ளிட்ட சுமார் 50,000 அமைப்புகள் நீண்ட காலமாக முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன.
நீர்ப்பாசன அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முடியும் போது சுமார் ஆயிரம் கிராம நீர்ப்பாசன அமைப்புகள் சேதமடைகின்றன. இவற்றை உரிய காலத்தில் பராமரிக்க வேண்டும். இருப்பினும், தெளிவான பார்வை இல்லாததால் இவை அழிந்துவிட்டன.
இதனால், குளங்கள், கால்வாய்களின் மதகுகள் உடைந்து பயிர்களுக்கு தண்ணீர் வழங்க வழியின்றி உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 150,000 நெல் வயல்கள் வெற்று நிலங்களாக காணப்படுவதாக மகாவலி அமைச்சு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால கனமழை மற்றும் நீண்ட கால வறட்சியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலைமையை எதிர்கொள்ள நமது நாட்டின் ஒட்டுமொத்த நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவது அவசியம். கிராமப்புற நீர்ப்பாசனத் திறனை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வெள்ளம் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்த முடியும்.
தேசிய உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமையவே 5000 கிராமப்புற சிறு நீர்ப்பாசன மற்றும் குடிநீர் அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான திட்டத்தை எங்கள் அரசு ஆரம்பித்துள்ளது. இன்று உங்கள் பிரதேசத்தில் உள்ள குளம் உங்கள் நலனுக்காக புனரமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் எமது முன்னோர்கள் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக கடந்த காலத்தில் உருவாக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் வாய்க்கால்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க முடியும் என நம்புகின்றோம்.
கடந்த காலங்களிலும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் குளங்கள் புனரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது எப்போதும் அறிஞர்களாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டன.
குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்க தொழில்நுட்பம் உள்ளது. குளங்களை தூர்ந்து ஆழப்படுத்தினால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு குளங்கள், அணைக்கட்டுகளை புனரமைப்பதற்கான தேசியத் திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். கடந்த கால தொழில்நுட்பமும், நவீன அறிவியல் அறிவும் இன்று இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம். ஒரு நாடாக நாம் ஒரு தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து வருவதுடன், வரலாற்றில் மிகவும் சவாலான நேரத்தை எதிர்கொள்கிறோம். உள்ளூர்வாதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமே எங்கள் நோக்கம். இந்த அமைப்பு சீரமைக்கப்படும் போது, கிராமப்புற மக்கள் விவசாயத்தில் படும் பல சிரமங்கள் நீங்கும். அதுமட்டுமின்றி, குளங்கள் புனரமைக்கப்படும் போது, அது பல தொழில்களுக்கு இடமளிக்கும். நன்னீர் மீன்பிடி தொழிலில் கூட ஈடுபடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளது.
இத்திட்டம் யதார்த்தமாகும்போது விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமன்றி கிராமியப் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்துவதே எமது தேவை.
இன்று மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இவை நமக்குத் தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதது போன்று உள்ளார்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதனால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நாட்டைப் பற்றி சிந்திக்கவும், அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான தளமொன்றை நிர்மாணித்தோம்.
கொவிட் தொற்று நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. நாங்களே அதனை செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராக உள்ளோம். இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களை அடுத்த முறை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
புத்தாண்டு காலம் நெருங்குகிறது. உண்மையான பிரச்சனையை பார்த்துக்கொண்டே நாளை எரிபொருள் இருக்காது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொய்யான மாயைகளை உருவாக்குகிறார்கள். சில பிரச்சினைகள் சிலரின் நலனுக்காக மக்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டன. அதனால்தான் கூறினேன், நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உங்களின் சிரமங்களை போக்கவும், உங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம் என்று பிரதமர் கூறினார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House