
posted 27th March 2022

அமரர் கலாநிதி இராயப்பு யோசேப்பு
இந் நிகழ்வு புனித செபஸ்தியார் பேராலயத்தில் 2.04.2022 அன்று காலை 9.30 மணிக்கு சிறப்புத் திருப்பலியும், நினைவுப் பேருரையும் இடம்பெறும். அனைவரும் இந்நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட திருச்சபை அழைப்பு விடுத்துள்ளது.
சமூக சம நீதிக்காய் தமிழ் தேசிய அறவுணர்வுடன் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குரலாய் பல சவால்களுக்கு மத்தியிலும் இனமானவுணர்வுடன் இன விடுதலைக்காய் அறப்பணி புரிந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர், அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்ட ஆண்டகையின் நினைவு பேருரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கும் அமரர் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இப் பேருரை எதிர்வரும் 02.04.2022 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர சபை மண்டப்பத்தில் இடம்பெற இருக்கின்றது.
இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மட்டக்களப்பு திருமலை ஓய்வுநிலை ஆயர் பேரருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.
அத்தோடு இவ் அரங்க அறிமுக உரையினை மனித உரிமை தொடர்பாக செயல்படும் அருட்பணி எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் வழங்கவுள்ளார்.
மேலும் நினைவு பேருரையாளர் தமிழ்த்தேசிய இருப்பில் அமரர் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வகிப்பாகம் என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் உரையாற்றவுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House