52 ஆவது வருடாந்த மாநாடு!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தபால் மற்றும் தொலைத் தொடர்பாடல் சங்கத்தின் 52 ஆவது வருடாந்த மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தபால் மற்றும் தொலைத் தொடர்பாடல் சங்கத்தின் தலைவர், என். இதயக்கமலன் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கைத் தபால் மற்றும் தொலைத் தொடர்பாடல் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார மீகம, உதவிச் செயலாளர் திலகரட்ண யட்டவர, நிர்வாகக் குழு உறுப்பினர் சோபாரட்ண மற்றும் தபால் சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஜெ. திருச்செல்வம் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை, மற்றும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு, சங்க உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

சங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தபால் மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் இதன்போது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும், நடைபெற்று உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆண்டுக்கான புதிய தலைவராக மீண்டும் முன்னாள் தலைவர் என். இதயக்கமலன் தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ஜி. ரஞ்சித் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் 10 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும், வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாளர் போட்டியின்றித் தேர்வானார்.

அதனைத் தொடர்ந்து புதிய ஆண்டுக்கான மாநாடு தொடர்ந்து நடைபெற்றதுடன், தபால் மற்றும் தொலைத் தொடர்பாடல் சங்கத்தினால் பல கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

52 ஆவது வருடாந்த மாநாடு!

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House