48வது அமர்வு
48வது அமர்வு

நிந்தவூர் பிரதேச சபையின் நாற்பத்து எட்டாவது சபை அமர்வானது பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

அமர்வினை ஆரம்பித்து வைத்த தவிசாளர் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை அரசு தன்னுடைய அதிகார ஆளுமையை பெரும்பான்மையாக வைத்துக் கொண்டும், பொருளாதாரத்தின் வீழ்ச்சி, பொருட்களின் நிர்ணய விலைய கட்டுப்படுத்த முடியாயாமல் போன காரணத்தை அறியமல், அன்மைக்கால முகநூல் விமர்சனங்களை அவதானிக்கும் போது இறைச்சி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை பிரதேச சபை நிர்ணயிக்கவில்லையென்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.

குறிப்பாக பொருளொன்றின் விலையினை நிர்ணயிப்பது பாவனையாளர் அதிகார சபையே. அதனை செய்ய பிரதேச சபைக்கோ, தவிசாளரருக்கோ எந்தவொரு சட்ட ஏற்புகளோ அதிகாரமோ கிடையாது. பிரதேச சபைக்குள்ள அதிகாரமானது பொருட்களின் தரங்களை சுகாதார வைத்திய அதிகாரியூடாக பரிசோதனைகளை மேற்கொண்டு தரமற்றவைக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதனையே பிரதேச சபை சிறப்பாக செய்து வருகின்றது.

ஆனால் இவ்வரசாங்கம் மிகவும் பொடுபோக்காக, தனன்னகத்தே இருந்த அதிகாரத்தை இழந்து செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக சீமந்து, பால்மா, எரிவாயு, எரிபொருள் என பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி விலை நிர்ணய கட்டுகோப்பினை இழக்கச் செய்திருக்கின்றது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளினூடாக எமது நாட்டினுடைய நிலைமை இஸ்திர தன்மையை இழந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அரச அலுவலகங்களுடைய செயற்பாடுகள் கூட எதிர்காலங்களில் முடக்கப்படலாம். எனவே எமது பிரதேசத்தை விட நகர்ப்புற வாழ் மக்கள் நாளாந்தம் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். ஆகவே இவ்வாறான விடையங்களில் மக்களை நாம் விளிப்பூட்டி வழிப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

எனவே எதிர்கால நிலைமையினை கருத்தில் கொண்டு மக்களுடைய தேவைகளான எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றுக்கான தீர்வுகளை, அதனோடு தொடர்புடைய நிறுவனங்களை நாடி, மக்கள் பணி செய்வதற்காக களமிறங்கிய நாம் பெற்றுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான விடயங்களில் பொறிமுறைகளை அமைத்து செயற்படக்கூடிய ஒரு நிலைமையினை எமது ஊர் மட்டத்தில் நாம் உருவாக்க வேண்டுமென தவிசாளர் தாஹிர் தெரிவித்திருந்தார்.

நிந்தவூர் பிரதேச சபையானது மூன்று கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தி ஆளுந்தரப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் (ACMC), அதனோடு இனைந்து உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திர கட்சியை (SLFP) பிரதிநிதித்துவப் படுத்துகின்றவராகவும், அதே போல சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை (SLMC) பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐக்கிய தேசிய கட்சி (UNP) உறுப்பினர்களும் காணப்படுகின்றார்கள். ஆக, மொத்தமாக பதின்மூன்று உறுப்பினர்கள் தங்கள் கட்சி கொள்கை சார்ந்த விடையங்களை குறித்த சபை அமர்வில் பேசியிருந்தார்கள்.

அதில் கெளரவ உதவி தவிசாளர் அவர்கள் தன்னுடைய சிறிலங்கா சுதந்திர கட்சி சார்ந்த அரசுக்கு சார்பான கருத்துக்களை சுட்டிக் காட்டியிருந்தார். கடந்த வாரம் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில், முஸ்லிம் தலைமைத்துவங்கள் பங்குபற்றாமையை மேற்கோள் காட்டி மிகவும் காட்டமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், முஸ்லிம் தலைமைகள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக செய்த, செய்து வருகின்ற தியாகங்கள் குறித்து தெளிவு படுத்தியிருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் கெளரவ உறுப்பினர் சப்ராஸ் அவர்கள், தனது கட்சி சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை முன்வைத்திருந்தார். அதில் அரசாங்கத்தை அமைக்க ஒத்துளைத்த உதய கம்மன்வில, விமல் வீரவன்ச போன்றோரை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வராமல், ஏனைய கட்சிகளுக்கு அளைப்பு விடுத்திருப்பதை அவதானிக்கும் போது, வேறு பின்னனிகள் இருக்க கூடுமென கருதமுடிகிறது. எனவே அவர்களுக்குள்ளிருக்கும் முரண்பாடுகளை தீர்த்து விட்டு, இதனை நடைமுறைப்படுத்துவதே சிறப்பாக இருந்திருக்கும். இவ்வாறான நிலைமையில் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க முடியாதவொரு சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே இம்மாநாட்டில் நாம் கலந்து கொள்வதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டதெனவும், எதிர்வருகின்ற ஏப்ரல் முதலாம் திகதி இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இக்கட்டான நிலைமையினை தென் கிழக்கு மக்களும் அனுபவித்து வருகிறார்கள் என்ற விடையத்தை அதிகாரத்தில் உள்ள பெருந்தேசிய வாதிகள் உணரும் வகையில், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் தலைமையில் அட்டாளைச் சேனை பிரதேசத்தில் மாபெரும் பேரணியொன்று ஏற்பாடாகியுள்ளது. எனவே கட்சி பேதங்களுக்கப்பால் இங்கு இருக்கும் கெளரவ உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

கெளரவ உதவி தவிளார் மற்றும் கெளர உறுப்பினர் சப்ராஸ் ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தவிசாளர் தாஹிர், இந்த நாட்டின் முன்னால் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரனில் விக்றம சிங்க அவர்கள் மிக நீண்ட நாட்களாக இந்த நாட்டின் பொருளாதாரம் இவ்வாரான நிலைமையினை அடையுமென பல முறை கூறியிருந்தும், யாரும் காதில் வாங்கி கொள்ளாத நிலைமையே காணப்பட்டிருந்தது. அதனாலயே இவ்வரசாங்கம் இந்நிலைமையினை சந்தித்து விட்டு ரனில் விக்றம சிங்க அவர்களுடன் பின் கதவால் பேசிவிட்டு சர்வ கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்குகிறோம் என்ற வெரும் போர்வையே அரங்கேற்றப்பட்டிருந்தது. எனவே அந்த மாநாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை அறிகின்ற போது ரனில் விக்றமசிங்க அவர்களுடைய கருத்துக்கள், அதுபோல நிதி அமைச்சரின் கருத்துக்கள் போன்றவை தெட்டத்தெளிவாக சிறுபான்மை சமூகம் சார் நலனில் அக்கறையில்லாமலேயே காணப்பட்டிருந்தது. சர்வதேச நாடுகளின் கைகளில் சிக்கி இந்நாடு சின்னாபின்மாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் எமது சமூகத்திற்கு பல அநியாயங்களை மேற்கொண்ட அரசுக்கு எதிர்ப்பினை காட்டும் வகையில்தான் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல எதிர்வருகின்ற ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெறவுள்ள அரசுக்கெதிரான பேரணியை இந்த பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகள், புத்தி ஜீவிகள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி முரண்பாட்டின் பலப்பரீட்சையா? நடைபெறப் போகின்றதென்ற ஐயப்பாடு அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. ஏன் என்றால் எமது நாட்டின் நிலைமை இவ்வாறிருக்க இந்த கட்சிகளுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசோடு இணைந்து செயப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கெதிராக இவ்வாறான பேரணிகளை முன்னெடுப்பது அவர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை பரீட்சிப்பதற்கான முஸ்தீபுகளே அன்றி வேறில்லை. இந்த அரசினை கொண்டு வந்த மக்களே இந்த அரசுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற இந்த நிலையில், சுய அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக நமது சமூகம் சார்ந்த காட்டிக்கொடுப்புக்களை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இப்பிராந்திய மக்கள் இப்பேரணியை மிகவும் கவனமாக கையாள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

48வது அமர்வு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House