
posted 2nd March 2022
12 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை விதித்த நீதிவான், அவர்களை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.
இரணைதீவு கடற்பரப்பில் சடடவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், குறித்த 12 இந்திய மீனவர்களும் கடந்த 13 ஆம் திகதி கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொரோனா தெற்றும் உயிரிழப்பும் அப்டேற்
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டும் 22 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்தது.
60 வயதுக்கு மேற்பட்ட 19 பேரும், 30 - 59 வயதுக்கு உட்பட்ட இருவரும் 11 ஆண்களும் 11 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 244 பேராக உயர்ந்துள்ளது.
2 ஆம் திகதியிலிருந்து மழை பெய்யலாம்
தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 2 ஆம் திகதி இரவிலிருந்து மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 4 ஆம் திகதி கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றும், இக்காலப்பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலும் கொந்தளிப்பாக கணப்படலாம் எனவும். எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடரும் காணி, சுவீகரிப்பு, அபகரிப்பு
முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படை தளத்துக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் க. விமலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிலர் காணிகளை அரசுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். பலர் காணிகளை வழங்க விரும்பமின்மையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணி கையகப்படுத்த கோரப்பட்டுள்ளது. இதில் 292 ஏக்கர் அரச காணிகளாக காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் தனியார் நிலமாக உள்ளது. இதில், 35 பேருக்கு சொந்தமான 379 ஏக்கர் காணியில் சிலர் காணி சுவீகரிப்பிற்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள். பலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
2014 ஆம் ஆண்டு வட்டுவாகல் கடற்படை தளத்தின் கணிசுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி தொடங்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கை பிரிவு 5 சட்டத்தின் கீழ் நில அளவீடு முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
காணி உரிமையாளர்கள் 23 பேர் இவ்வாறு காணியை வழங்க விருப்பம் இல்லாத நிலையில் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருந்தும் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House