
posted 9th March 2022
விலங்குகளும் பாதைகள் தூக்கலாம், மனிதருக்கெதிராக?
யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (06) மாலையும் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சியின் பெயரைச் சொல்லி ஜிப்ரிக்கோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜிப்ரிக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இளவாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் தாக்குதலுக்குள்ளான அவரது குடும்பத்தினர் அனைவரும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரது ஒரு சகோதரியும் தந்தையும் தாயும் மல்லாகம் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிப்ரிக்கோவின் வீட்டுக்கு சென்ற வாள்வெட்டுக் கும்பல் ஒன்று அவரது உடைமைகளை சேதமாக்கியதுடன், செல்லமாக வளர்த்த கிளியையும் வெட்டி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிப்ரிக்கோவின் வீட்டில் தாக்குதல் நடத்திய அதே பகுதியை சேர்ந்த மூவர் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கத்தின் விலை அதிகரிக்க கொள்ளையர் அட்டகாசமும் உச்சம்
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஆயிரத்து 500 ரூபாயால் உயர்வடைந்து ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு குறைவடைந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை 22 கரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஒரு பவுண் ஆபரணத் தங்கம் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்பட்டது.
அவதானம்!!! தங்கக் கொள்ளையர்!!
பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்ற வீடு ஒன்றில் 14 பவுண் நகைகள் திருடப்பட்டன. அத்துடன், 2,500 வெளிநாட்டு பவுண்ஸ் நாணயங்களும் திருடப்பட்டுள்ளன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூர் - நவக்கிரியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்பக்க யன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுண் தாலி உட்பட 2 பவுண் சங்கிலியையும் திருடிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட நகையின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரிகளிருவரைக் தட்டிவிழுத்திக் காயப்படுத்திய ரிப்பர்
சைக்கிளில் தனித் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த சிறுமிகளான சகோதரிகளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதில் படுகாயமடைந்துள்ளனர்.
மாங்குளம் - முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குடும்ப தேவைக்காகக் கொள்வனது செய்த பொருட்களுடன் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த சகோதரிகளே இவ்வாறு படுகாயமடைந்தனர். இருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சாரதியை கைது செய்தனர். எனினும், அந்த சாரதியைக் கொண்டே வாகனத்தை எடுக்க முற்பட்டபோது கூடியிருந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உயரதிகாரி, குற்ற செயல் தொடர்பில் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று வாக்குறுதி அளித்தார். அத்துடன், வேறொரு சாரதி மூலம் டிப்பர் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார்.
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தத ஒன்றரை வயது குழந்தை
டெங்கு காய்ச்சலால் தென்மராட்சி - மீசாலை வடக்கை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது.
வாகீசன் விதுசன் என்ற குழந்தையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆயுள்வேத சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் நிலை மோசமாகவே, சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் சேர்ப்பித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. ஆனால், அன்றிரவே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரிய வந்தது.
டெங்கு காய்ச்சல் காரணமாகவே குழந்தையின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் நேற்று மேற்கொண்டார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House