
posted 18th March 2022
வடக்கு கிழக்கில் பல நண்பர்கள் ஒன்றிணைந்து வேலை செய்கின்ற வருமானத்தின் ஒரு பகுதி நிதியை இருமாதத்திற்கு ஒருதடவை ஒதுக்கி ஒளி உதவும் நண்பர்கள் அமைப்பு என்ற பெயருடன் அன்றாட வருமானத்திற்கு கஸ்ரப்படும் குடும்பங்களிற்கும் , கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாணவர்களிற்கான செயலமர்வு கருத்தமர்வுகள் என பல்வேறு விதமான உதவிகளை நீண்ட காலமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் மட்டக்களப்பு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம்-13 மாணவர்களிற்கான வழிகாட்டல் செயலமர்வும், உளவளத்துணை செயலமர்வும் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதற்கான நிதியுதவியும் மதிய உணவிற்கான நிதியுதவி வழங்கி செயலமர்வையும் ஒளி உதவும் நண்பர்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்காலத்தில் மாணவர்கள் தடம்மாறி செல்கிறார்கள். இந்நிலை மாறி தமிழ் மாணவர்கள் கல்வி ரீதியாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இச் செயலமர்வை நடத்த நிதியில்லாமல் பாடசாலை சமூகம் இருந்த போது, உடனே ஒளி உதவும் நண்பர்கள் நிதியுதவியை மட்டக்களப்பு ஒளி உதவும் நண்பர்களின் இணைப்பாளர் பிரசாந் மூலம் நடாத்தி முடிக்கப்பட்டது. வடக்கு கிழக்கின் பல நண்பர்கள் ஒன்றிணைந்து ஏனைய இளைஞர்களுக்கு முன்னுதரணமாக தற்காலத்தில் இவ்வாறான உதவிகளை செய்து வருவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் உதவி புரிந்த நண்பர்களாக வெள்ளை அண்ணா, மயூரன் , இசைவாணன், பானு, ரகுநாதன், பார்த்தீபன், சந்துரு, அன்பரசன், குயின்ரன்சேர், கௌரிசங்கர், சிவனந்தன், தனிஸ்ரன், அருட்குமார், தனேஸ், நிதர்சன், பிரபு, ஜெசீப், திருமாறன், ஜெபா, சதீஸ் (வெளிநாடு), யுகதீஸ், பிரசாந், இளங்கோசாள்ரஸ் ஆகியோர் தமது சொந்த நிதியில் இருந்து நிறைய உதவிகளை நீண்டகாலமாக செய்து வருகிறார்கள்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House