யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமானது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. சிறி சற்குணராஜா தலைமையில் நேற்று ஆரம்பமான பட்டமளிப்பு விழா நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இன்றும், நாளையும் தலா மூன்று அமர்வுகளும், நாளை மறுதினம் சனிக்கிழமை இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்றுச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேந்தர் சம்பிரதாய பூர்வமாக இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களும், பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமையை உறுதி செய்வார்.

உயர்பட்டப்படிப்புகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பபீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House