
posted 21st March 2022
சம்மந்துறை புளக் ஜே- வெஸ்ட் வண்டு வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல், அன்வர் இஸ்மாயில் வித்தியாலயம் மற்றும் மையவாடி என்பவற்றை ஊடறுத்துச் செல்லும் கைகாட்டி பிரதான வாய்க்காலுக்கு மேம்பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அமைப்பின் மஷூரா குழுத் தலைவர் ஹாபிழ் எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.காதர், நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.யாகூப் உட்பட பலாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேச பொது மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற இப்பாலத்தை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ரஹ்மத் மன்சூருக்கு இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதன் பயனாக பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் மையவாடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற அசௌகரியங்கள் நிவர்த்தி செய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இத்திட்டத்திற்கு வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனம் முழுமையான அனுசரணை வழங்கி வருவதாகவும் குறுகிய காலத்தினுள் மேம்பால நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பொது மக்களுக்குத் தேவையான பல்வேறு மனித நேய சமூகப் பணிகள் தமது அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு வை.டபிள்யூ.எம்.ஏ. ஒத்துழைப்பு வழங்கி வருவதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House