முஸ்லிம் மீடியா போரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு - 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை அல்-ஹிதாயாகல்லூரி எம்.சீ. பஹார்டீன் நினைவு கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்-அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மாநாட்டின் முதலாவது அமர்வில் கலாநிதி.எம்.ஸீ. ரஸ்மின் “ஊடகமும் முஸ்லிம்களின் எதிர்காலமும்” எனும் தலைப்பில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அத்துடன், மாநாட்டில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் நாடுமாநிலதுணைத் தலைவருமான கே. நவாஸ்கனி கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அவர் அமைச்சர் டலஸ் அழகப் பெருமவுக்கும், முஸ்லிம் மீடியா போரத்தை 25 வருட காலம் கட்டி வளர்த்த தலைவர் அல்-ஹாஜ் அமீனுக்கும் பொன்னாடைகள் போர்த்தி தமது கௌரவத்தையும், அன்பையும் வெளிப்படுத்தினார்.

மேலும் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து அங்கத்தவர்கள் வருகை தந்து கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விசேடமாக முஸ்லிம் மீடியா போரத்தின் “மீடியா டிரக்ரி” ஒன்றும் வெளியிடப்பட்டதுடன், 2018 முதல் 2022 வரையான மீடியா போரம் வருடாந்த அறிக்கை மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாநாட்டில் தலைவர் அல்-ஹாஜ் என்.எம். அமீன் தலைமை உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“கடந்த 25 வருடகால வெற்றிகரமான பயணத்தை முஸ்லிம் மீடியா போரம் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றது. இந்த வகையில் எமது ஊடகவியலாளர்களின் நலன்களுக்காகமட்டுமன்றி, தேசிய ரீதியிலான, முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களுக்காகவும் குரல் கொடுத்துவருகின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கெனப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த அரசு காலத்தில் அந்நியமனம் இல்லாமலாக்கப்பட்டு இதுவரை பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.

அதேவேளை நல்ல வருமானத்தை ஈட்டிதரும் முஸ்லிம் சேவையில் ஊழியர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்த விடயங்களில் அமைச்சர் கவனம் கொண்டு ஆவன செய்யக்கோருகின்றோம்.

அத்துடன் அரச ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு தமிழ், முஸ்லிம் பிரதி நிதிகளையும் நியமனம் செய்யும் பாரம்பரியமும் தொடர வேண்டும்” என்றார்.
இரண்டாம் அமர்வில் நடப்பு வருட புதிய உத்தியோகத்தர்கள் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றி வருபவருமான, ஓய்வு பெற்ற ஆசிரியை ஜனாபா. புர்ஹான் பீ. இப்திகார் தெரிவானார்.

பிஸ்ரின் முஹம்மட் செயலாளராகவும், சிஹார் எம். அனீஸ் பொருளாளராகவும் தெரிவானதுடன் 18 பேர் கொண்ட நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் மீடியா போரம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House