முஸ்லிம் காங்கிரஸின் பேரணி

நாட்டின் படுமோசமான இன்றைய நிலையில் விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுபோன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள அவலங்களுக்கு தீர்வு வழங்கக் கோரியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணி எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம் பெறவிருக்கின்றது.

“தென்கிழக்கின் பேரணி” எனும் தலைப்பில், தென் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இந்த எழுச்சிப் பேரணி இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவிருக்கும் இப்பேரணி கட்சி மற்றும் இன, மத பேதங்களுக்கு அப்பால் சகலரையும் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் (வெள்ளி) பிற்பகல் தென்கிழக்கு பிரதேசங்களிலிருந்து இந்த ஆர்ப்பட்டப்பேரணியில் கலந்து கொள்ள வருகை தருவோர் அட்டாளைச் சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் ஒன்று திரண்டு அங்கிருந்து அட்டாளைச்சேனை ஜும்ஆபள்ளிவாசல் முன்றல் வரை பேரணி இடம்பெறுமெனவும்,

அதன் பின்னர் அங்கு அரசையும், அதன் வக்கற்ற அரச நிருவாகத்தால் மக்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகியுள்ள நிலைமையை கண்டித்தும் பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கண்டனப் பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சிலரும் பங்குபற்றலாமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், மேற்படி பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான எம்.ரி.எம்.சப்றாஸ், கட்சி பேதங்களுக்கப்பால் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேரணியில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.
உறுப்பினர் சப்றாஸ் அமர்வில் உரையாற்றுகையில்,

“கடந்த நல்லாட்சி அரசின் வரிக்கொள்கையை மாற்றியதுடன் நிபுணத்துவ ஆலோசனைகளைப் புறந்தள்ளிதான் தோன்றித்தனமாக அரசு செயற்பட்டமையாலேயே பொருளாதாரம் அதளபாதாளத்திற்குச் சென்று மக்கள் வாழ முடியாத பெரும் சுமைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

முதுமகா விகாரை, தீகவாப்பி, ஜெய்லானி போன்ற பௌத்த தலங்களைக் காப்பறியுள்ளேன் என்ற ஜனாதிபதியின் பேச்சும், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்த அரசின் இனவாத நடவடிக்கைகளும் மக்களைப் பெரிதும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.
முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுபெற்ற பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சி என்ற வகையில் இத்தகைய மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் பேரணியை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுப்பது எமது பொறுப்பாகும்” என்றார்.

கடந்த 21 ஆம் திகதி “போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்” எனும் தலைப்பில், நடைபெறவிருக்கும் பேரணி தொடர்பான தகவலை முதலில் வெளியிட்ட ஊடகமென்ற பெருமை “தேனாரம்” இணையத்தையே சாரும் என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் பாராட்டுத்தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் பேரணி

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House