முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைக்கத் திட்டம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைப்பதற்கோ, பிரித் ஓதுவதற்கோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஆலய தர்மகத்தா சபையும், ஊர் மக்களும் தீர்மானித்துள்ளனர்.

சைவ ஆலயமான இந்த ஆலயத்தில் எந்த மதத்தவர்களும் வந்து வழிபட முடியும் எனவும், அவர்கள் தமது மதச் சின்னங்களை நிறுவுவதற்கோ, அது சார்ந்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கோ, முருகன் அடியார்களும் ஊர் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் உறுதிபடக் கூறினர்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மேற்படி முருகன் ஆலய உள் வீதியில், தீர்த்தக் கேணிக்கு அருகே, நீண்ட காலமாக அரச மரம் ஒன்று உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்வப்போது ஆலயத்துக்கு வருகின்ற பிக்குகள் முருகனை வழிபட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நாளை பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையொன்றை வைத்து பிரித் ஓதுவதற்கு பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தி அறிந்த மக்கள் கடும் சீற்றமடைந்தனர்.

இது தொடர்பாக ஆலயத்தில் நேற்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சைவ ஆலயமான பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு கடும் கண்டனமும் வெளியிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ச. அனந்தி, வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த. நடனேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இதேவேளை, கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது படைப் புலனாய்வாளர்கள் பலர் ஆலயத்திற்கு அண்மையில் நின்று கூட்டத்தை அவதானித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைக்கத் திட்டம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House