மீண்டும் பிற்போடப்பட்ட பேச்சுவார்த்தை

ஊடக அறிக்கை

இன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிற்கும் இடையில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையானது கடைசி நேரத்தில் ஜனாதிபதி செயலகதினால் பிற்போட்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி இன்று மதியம் கொழும்பில் நடத்துகிற ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக எங்களிற்கு அறிவித்திருக்கிறார்கள். மார்ச் மாதம் 25ம் திகதி காலை 10 மணிக்கு இக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பின்னர் பிற்போடப்பட்ட கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இன்றைய திகதி எமக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் பங்காளி கட்சி தலைவர்கள் மூவருடனும் பேசிய பின்னர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.

ஜனாதிபதியுடன் பேசுவதற்கான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான இன்று காலை 10 மணிக்கு கௌரவ இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தது உரையாடி உள்ளோம். இதிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரும், பொதுச் செயலாளரும் கலந்து கொண்டனர். இன்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தால் தாம் அதில் கலந்துகொண்டிருக்க மாட்டோம் என்றும், ஆனால் இக்கூட்டம் பிற்போடப்பட்டிருப்பதால் மார்ச் 19ம் திகதி தங்கள் கட்சி இந்த முடிவை மீளாய்வு செய்யும் எனவும் எங்களிற்கு அறிவித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மார்ச் 25ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்து தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலான இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் பல தொடர்பில் கலந்துரையாட உள்ளோம்.

எம்.ஏ. சுமந்திரன்
ஊடக பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு



இதனுடைய மூல ஊடக அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும் >>>> ஊடக அறிக்கை

மீண்டும் பிற்போடப்பட்ட பேச்சுவார்த்தை

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House