
posted 25th March 2022

சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன்
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில், காணாமல் போனோர் உறவினர் சார்பில் சட்டத்தரனிகள் ஆஜராக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் காணாமல் போனோர் உறவினர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியும் என்ற தீர்பபைத் தொடர்ந்து மீண்டும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கு வெள்ளிக்கிழமை (25.03.2022) மன்னார் நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் அழைக்கப்பட்டபோது இவ் வழக்கு சார்பாக அழைப்பானை விடுக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் மன்றில் சமூகமளிக்காது பொலிசார் மூலம் பிறிதொரு தினத்துக்கான சமர்ப்பணம் முன்வைத்ததைத் தொடர்ந்து இவ் வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கட்டிட வேலைகள் இடை நிறுத்தப்பட்டு மனித எச்சங்களுக்கான அகழ்வு வேலைகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்தன.
நிலுவையில் இருந்து வந்த இவ் வழக்கு தொடர்பாக, மீண்டும் இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டபோது பாதிப்படைந்த மக்கள் சார்பாக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
10.02.2020ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் சதொச புதைகுழி வழக்கில் காணாமல் போனோர் சார்பில் அவர்களின் நலனை கவனிக்கும்பொருட்டு, ஆஜராகிய சட்டத்தரணிகள் இவ் வழக்கில் ஆஜராக முடியாது என்று அரச சட்டத்தரணிகளால் வாதம் வைக்கப்பட்டபோது, அதை மன்னார் நீதவான் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு காணாமல் போனோர் சார்பில் சட்டத்தரனிகள் ஆஜராக முடியாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இக் கட்டளைக்கு எதிராக மீளாய்வு மனு ஒன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அரச சட்டத்தரணிகள் காணாமல் போனோர் சார்பிலுள்ள சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான வாதபிரதிவாதங்கள் எழுத்துமூலம் சமர்ப்பணத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களினால் 22.02.2022 அன்று கடட்டளையாக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கமைவாக இந்த வழக்கில் பாதிப்படைந்தோர் சார்பாக சட்டத்தரனிகள் ஆஜராக முடியும் எனவும், ஏற்கனவே மன்னார் நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு கட்டளையை ரத்து செய்து இவர்களுடைய அக்கறையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரனிகளுக்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (25.03.2022) பாதிப்படைந்தவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரனிகளுக்கும், சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் இராஜ் சோமதேவாவுக்கும், மன்னார் பொலிசாருக்கும் மன்னார் நீதிமன்றில் முன்னிலையாகும்படி அனுப்பப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, வெள்ளிக்கிழமை (25.03.2022) அன்று பி 232 - 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்பாக பாதிப்படைந்தவர்கள் சார்பான சட்டத்தரணிகள் வீ.எஸ். நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி றனித்தா ஞானராஜா ஆஜராகி இருக்கையிலே சட்டவைத்திய அதிகாரியோ தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியரோ நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை.
இருந்தபோதும், மன்னார் பொலிசாரால் சமர்ப்பணமொன்று மன்றில் செய்யப்பட்டது. அவர்களின் உசிதமான தினமான ஏப்பிரல் மாதம் 6ந் திகதி (06.04.2022), அன்றைய தினம் இவ்வழக்கை அழைக்குமாறு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ அவர்களால் இவ் வழக்ககை 06.04.2022 அன்று அழைப்பதற்கான கட்டளை பிறப்பித்துள்ளார் என தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் மற்றும் றனித்தா ஞானராஜா ஆகியோரும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி புராதினியும் மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House