
posted 9th March 2022
நம் பெண்களின் அடிமை வாழ்வை தகர்த்தெறிய சர்வதேச மகளீர் தினத்தில் ஒரணியாய் திரள்வோம். இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்துப் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த உழைக்கும் வர்க்கத்தினர் நாம் அனைவரும் ஒன்றினைவோம்.
வீட்டிற்கு வீடு வாசற்படி நின்று வீட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியொழுப்ப முதுகெழும்பாய் நிற்கும் நம் குலப் பெண்கள் அடிமை வாழ்வைத் தகர்த்தெறிய ஓரணியாய் குரல் கொடுப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 52வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்களாவர். இப் பெண்களில் தலைமை தாங்கும் குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டோர்கள், அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் அடிமைத் தனத்தை இல்லாதொழிப்பதோடு, அரச தனியார், ஏனையவற்றில் தொழில் புரிகின்ற பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அயராது உழைப்பதோடு, தலைமை தாங்கும் குடும்பப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், குறிப்பாக, விதவையாக்கப்பட்ட பெண்களினதும், வாழ்வாதாரம் குறைந்த நிலையில் வேலை செய்யும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், பாலர் பாடசாலை கல்விப் பணியகம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தை அதிகரிக்க குரல் கொடுப்போம்.
இவ்வாண்டில் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் பெண்களின் துன்பம் துடைத்து அவர்களின் அரசியல், சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்திக்காக ஒன்றுபட்டு உழைப்போம்.
இந்த நாட்டில் வாழும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களை சம அந்தஸ்துடன் நடாத்தும் கடமையினை அரசியல் உறுதிப்பாடாய் முன்னெடுப்போம்.
பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, காருணியம் போன்ற உன்னத உணர்வுகளுடனே பெண்களை அவர்களின் சமூக விடுதலை நோக்கி வழிப்படுத்துவோம். பெண்களும் நம்முடன் பிறந்தவர்களே; அவர்களும் வாழ்க்கையின் பல்வேறு மட்டங்களிலும் எம்மைப் போல் பல்வேறு பாத்திரங்களை ஏற்று வழி நடாத்தும் பெண்களைப் போற்றுவோம், வாழ்த்துவோம். அவர்களின் சுய மரியாதைக்கு கௌரவம் கொடுப்போம், அதற்காக் கூடி உழைப்போம்.
பெண்களின் அடிமை தளையுடைத்து பெண்ணினத்தின் விடுதலைக்காய் குரல் கொடுப்போம்.
வாழ்க மகளீர்! தொடர்க அவர்கள் பணி! என வாழ்த்தி பெண்ணினத்தின் உரிமை வெல்க என சர்வதேச மகளீர் தினத்தில் உறுதியோடு குரல் கொடுப்போமென அவர் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House