
posted 15th March 2022

ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ
இறுதிப் போரில் நடந்தேறிய போர்குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டாமலும், சர்வதேசத்தின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டும் தன்னிச்சையாக செயற்படும் ஓர் அரசாங்கமே இன்று ஆட்சியில் உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் நினைவுகூறும் தவக்காலத்தில், ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் தங்கள் மறைமாவட்ட மக்களுக்கும் தவக்கால திருமடல் எழுதுவது வழமையாகும். இதற்கமைவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோவும் மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு எழுதியுள்ள திருமடலில்,
அருளின் காலமாகிய தவக்காலத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் மீண்டும் காலடி பதித்துள்ள இவ்வேளையில், நாம் மனமாற்றம் பெறுவதற்கும், நம்மைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் திருமறையில் தெரிவித்திருப்பதுபோல் 'இதுவே தகுந்த காலமாகும். உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக'
நாங்கள் மட்டுமீறிப் பற்றுதல்களிலிருந்து விடுதலை பெற்று நிலையற்றவற்றில் மனதை ஈடுபடுத்தாது, நிலையானவற்றில் மேன்மேலும் மனதைச் செலுத்துமாறு எங்களை தூண்டுகின்ற காலமே இத் தவக்காலம் ஆகும்.
இத்தவக்காலத்தில் செபம், தவம், தானதருமம் ஆகிய மூன்றும் இன்றியமையாதவை. ஆகவே இவற்றை நோக்கி நம்மை இட்டுச்செல்ல வேண்டும்.
இந்நாட்களில் நம்மைநாமே புதுப்பிப்பதோடு மற்றவர்கள் மட்டில் நமக்குள்ள கடமைகளையும், பொறுப்புக்களையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நம்முடன் வாழ்கின்றவர்களின் ஆன்மீக உலகியல் தேவைகள் மட்டிலும் நாம் அக்கறையும், கரிசனையும் காட்ட வேண்டும். இதைத்தான் இந்த ஆண்டுக்கான தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு உரோமபுரியில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது. 'ஒரு கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக ஒன்றிப்பு பங்கேற்றல் பணி' என்ற கருப்பொருளில் இதற்கான ஆயத்தப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் மன்னார் மறைமாவட்டமும் ஈடுபடுத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் ஆயர் தனது தவக்கால திருமடலில் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கை நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்சாரத்தடை போன்றவை சாதாரண மக்களை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகப் பாதித்து வருகின்றன.
இதுமட்டுமல்ல இலங்கை அரசானது ஈஸ்ரர் தினத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது. இதனால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
அத்துடன் இறுதிப் போரில் நடந்தேறிய போர்குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டாமல் சர்வதேசத்தின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக செயற்படும் ஓர் அரசாங்கமே இன்று ஆட்சியில் உள்ளது.
இவ்வாறு ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கினால் அனைத்து மக்களும் ஆழ்ந்த அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். ஆகவே பவுலடியாரின் கூற்றுப்படி 'இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர்நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுவோம் என தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House