பொருள் சிறிதாக காணப்பட்டாலும் காரம் பெரிது - திலக் பெர்னாண்டோ

வழங்கப்படும் இக் கன்றுகளின் பெறுமதி உங்களுக்கு மிக சிறியதாக காணப்பட்டாலும், இதனை நீங்கள் சரியாக வளர்ததெடுத்து பலன் பெறுவீர்களானால் இதன் பெறுமதியோ அளப்பறியது என மன்னார் மாவட்ட குறுநிதி திட்ட சமூர்த்தி முகாமையாளர் ரி.ஏ. திலக் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசின் திட்டத்துக்கமைய, 22 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு முழு நாட்டினையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்படும் 'ஹரிக் தெயக்' தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கைத் திட்டத்தினை செவ்வாய் கிழமை (29.03.2022) நாடு பூராகவும் ஆரம்பித்து வைத்துள்ளது.

இதற்கமைய பேசாலை வடக்கு கிராம அலுவலகர் பிரிவில் பேசாலை வடக்கு கிராம அலுவலகர் வேர்ஜினி தலைமையில் அன்றையத் தினம் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மன்னார் மாவட்ட குறுநிதி திட்ட சமூர்த்தி முகாமையாளர் ரி.ஏ. திலக் பெர்னாண்டோ தொடர்ந்து இங்கு பயனாளிகள் முன்னிலையில் உரையாற்றுகையில்,

தற்பொழுது அரசின் திட்டத்துக்கு அமைவாக உங்களுக்கு வீட்டுத்தோட்டத்துக்கான பயிர்கள் வழங்கப்படுகின்றன. இதை நீங்கள் பார்க்கின்றபோது இது உங்களுக்கு ஒரு சிறிய தொகை கொண்ட ஒரு பொருளாக நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இதை நீங்கள் உங்கள் வீடுகளில் இதை சரியான முறையில் பராமரித்து வளர்த்து எடுப்பீர்களானால், இது உங்கள் வீட்டுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதுடன் உங்கள் பொருளாதார செலவையும் கட்டுப்படுத்தும்.

அத்துடன் இதன் மூலம் உங்கள் வருமானத்தையும் தேடும் ஒரு செயல்பாடாகவும் இது அமையும். இன்று இவ் உபஉணவு பயிர்கள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கின்றது என நீங்கள் எண்ணி இதன் பெறுமதியை உதாசினப்படுத்தக் கூடாது.

இதை உங்களுக்கு உற்பத்தி செய்பவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் இப் பயிர்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளனர். ஆகவே இவற்றை உணர்ந்தவர்களாக நீங்கள் இப் பயிர்களை உங்கள் வீடுகளில் பக்குவமாக வளர்த்தெடுத்து உங்கள் வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், இதன் மூலம் உங்கள் வருமானங்களையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை கையாளுவீர்கள் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது மன்னார் பிரதேச செயலக பிரிவில் மன்னார் வடக்கு சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ. கார்த்திக்கா பேசாலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர். ஆனந்தஜோதி கூஞ்ஞ மற்றும் பேசாலை சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஜெ. யஸ்மினி டயஸ் உட்பட பயனாளிகள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்து.

பொருள் சிறிதாக காணப்பட்டாலும் காரம் பெரிது - திலக் பெர்னாண்டோ

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House