பியூஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி

மன்னார் மைந்தன் தேசிய கால்பந்தாட்ட அணி வீரர், காலம் சென்ற டக்ஸன் பியூஸ்லஸின் உடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம்.

மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த டக்ஸன் பியூஸ் மாவட்ட அணி, மாகாண கால்பந்தாட்ட அணி மற்றும் தேசிய அணி வீரராக பிரகாசித்து வந்த நிலையில் மாலைதீவு கழக அணி ஒன்றுக்காக ஒப்பந்த ரீதியாக விளையாடிவந்த நிலையில் மரணம் அடைந்தார்.

அன்னாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை (07) மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக நல்லடக்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், வடமாகாண காலப்ந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அல்லாது ஆயிரக்கனக்கான மக்கள் பியூஸின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பியூஸின் உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டுக்கு பின்னர் மன்னார் பொது மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரின் பூதவுடல் மன்னாருக்கு எடுத்து வரப்பட்டபோதும் அவ்வாறு இவரின் இறுதி கிரிகையின்போதும் மன்னார் நகர் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததுபோல் காடசியளிக்கப்பட்டது.

டக்ஸன் பியூஸ், தான் மாவட்ட ரீதியில் மாகாண ரீதியில் தேசிய ரீதியில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியிலும் கால்பந்தாட்டத்தின் மூலம் தனது நாமம் மட்டுமல்ல தனது இலங்கை நாட்டினதும் தனது பிறந்த மண்ணாகிய மன்னாரின் புகழ் ஓங்கப்பட வேண்டும் என கனவு கண்டவர் ஈற்றில் அவற்றை நனவாக்கிச் சென்றவர்தான் இந்த வீரர்.

அதுமட்டுமல்ல மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுக்கென பல இடங்களில் சரியான மைதானங்கள் அற்ற நிலையாலும், நவீன கருவிகளாலும் உடற்பயிற்சி விளையாட்டுக்கள் அருகிக் கொண்டு செல்லும் இச் சமகாலத்தில் மறைந்த மன்னார் மைந்தனும் உலகம் போற்றும் கால்பந்தாட்ட வீரனுமான டக்ஸன் பியூஸ் தனது இறுதி கிரிகையின்போது தனது மண்ணின் மைந்தர்களுக்கு இறுதியாக செய்தி ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளார் என்றும் பலரின் எண்ணங்களில் உதயமாகியுள்ளன.

நான் படித்து பட்டம் பதவி பெற்றிருக்கின்றேனோ இல்லையோ, அது ஒருபுறமிருக்க ஒரு விளையாட்டு வீரனுக்கு கிடைத்துள்ள பெருமை என்னவென்று தனது உடலின் இறுதி சடங்கின்போது மன்னார் நகரில் ஒன்று திரண்ட மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகின்றது என அந்த வீரர் சொல்லாமல் சொல்லிச் சென்றுள்ளார் என்பதாகும்.

ஆகவே இறுதிவேளையிலும் விளையாட்டுத் துறைக்கு மன்னாரில் உரமிட்டுச் சென்றிருக்கும் இவ் வீரரின் ஆன்மாவின் கனவு நனவாகட்டும்.

பியூஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House