பறங்கியாற்றில் அனுமதியற்ற முறையில் மண் அகழ்ந்த இருவர் கைது. உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டது...!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பறங்கியாற்று கிடக்கை பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உழவியந்திரங்களும் நட்டாங்கண்டல் போலிசாரால் 16.03.2022 மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

நட்டாங்கண்டல் இரகசிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் இருவரையும் பிணையில் செல்ல பொலிசார் அனுமதியளித்துள்ளனர். குறித்த இரு சாரதிகளையும் மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

பறங்கியாற்றில் அனுமதியற்ற முறையில் மண் அகழ்ந்த இருவர் கைது. உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டது...!

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House