பனம்கள்ளை ஏற்றுமதி செய்யும் முயற்சியில்..பந்துல

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்-

தற்போதைய சூழ்நிலையில் வர்த்தகத்துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு ஏற்றுமதியை செயற்படுத்துவதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம்.

அதன் ஒரு அங்கமாக பனங்கள்ளு உற்பத்தி கிராமம், பனங்கட்டி உற்பத்தி கிராமம், கடலட்டை உற்பத்தி கிராமம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் ஏதாவது எமது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்கத் தயார். தற்போது நமது நாட்டுக்கு ஏற்றுமதி கட்டாயம் தேவையானது.
குறிப்பாக நுவரெலியாவில் கோப்பி, தேயிலை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது. எனவே வடக்கில் இருந்து பனங்கள்ளை தயார் செயது ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

பனம்கள்ளை ஏற்றுமதி செய்யும் முயற்சியில்..பந்துல

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House