நாட்டின் வறுமையின் கொடுமை தாங்கா குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்வு

நாட்டில் கடும் பொருளாதார பிரச்சனை தலைதூக்கத் தொடங்கியதன் காரணமாக தலைமன்னார் பகுதியூடாக இரு குடும்பங்களைச் சார்ந்த ஆறு பேர் இராமேஸ்வரத்துக்கு சட்டபூர்வமற்ற முறையில் கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது இலங்கையைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சார்ந்த ஒரு ஆண் இரு பெண்கள் ஒரு குழந்தை இரு சிறுவர்கள் உட்பட ஆறுபேர் தலைமன்னார் பாக்குநீர் வழியாக ஒரு படகின் மூலம் இராமேஷ்வரம் சென்றுள்ளனர்.

ஒரு படகில் சென்ற இவர்களை படகோட்டிகள் இராமேஸ்வரத்திலிருந்து மூன்றாம் மணல் திட்டியில் கரை இறக்கிவிட்டு படகு தப்பிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் இடம்பெயர்ந்து சென்றவர்கள் மணல் திட்டியில் நிற்பதாக இந்திய கடல் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இவர்கள் செவ்வாய் கிழமை (22.03.2022) தீடை என அழைக்கப்படும் மணல்திட்டி பகுதியிலிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வறுமையின் கொடுமை தாங்கா குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்வு

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House