தூத்துக்குடியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.  7பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ. 2.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, கஞ்சா போன்றவை கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் குழும போலீசார், கியூ பிரிவு போலீசார், தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், தலைமை காவலர் ராமர், முதல் நிலை காவலர் இருதயராஜ், மற்றும் இசக்கி முத்து, கோவிந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடற்கரையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தி கொண்டு செல்ல முயன்ற சுமார் 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.2.5 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தூத்தக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேசன் (49), முருகேசன் மகன் மாரிகுமார் (32), சிதம்பரத்தைச் சேர்ந்த ஜஹாங்கிர் பாதுஷா மகன் மன்சூர் அலி (37), தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பன்னீர்செல்வம் (42), தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலோன் காலனி கந்தசாமி மகன் யோகேஸ்வரன் (41), லூர்தம்மாள் புரம் முருகன் மகன் இசக்கி முத்து (40), மேல அழகாபுரி பெருமாள் மகன் வினீத் (25) ஆகிய 7பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 9 செல்போன், 3பைக்குகளும் கைப்பற்றப்பட்டன.

தூத்துக்குடியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.  7பேர் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House