
posted 31st March 2022

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் மாபெரும் பேரணிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் படுமோசமான பொருளாதார பின்னடைவினால் மக்கள் அடைந்துவரும் துன்பங்களை எடுத்துக்காட்டும் வகையிலும், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தவிருக்கின்றது.
இதற்கு ஏதுவாகவும், பேரணிக்கான கள நிலவரங்களை ஊக்குவிப்பதற்காகவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து களநிலவரங்களை ஊக்கப்படுத்தியதுடன், பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். தலைவர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, பொத்துவில் முதலான பிரதேசங்களுக்கு நேரில் விஜயம் செய்து, கட்சி முக்கியஸ்தர்களையும் ஆதரவாளர்களையும் இது விடயமாக சந்தித்தார்.
முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மக்கள் எழுச்சிப் பேரணி அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (01) பி.ப. 3 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது.
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்தில் பேரணி ஆரம்பமாகி அட்டாளைச்சேனை ஜும்ஆப்பள்ளிவாசல் முன்றல் வரை இடம்பெறுவதுடன், அங்கு மாபெரும் பொதுக்கூட்டமும் இடம்பெறும். இக்கூட்டத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் உட்பட பங்குகொள்ள எதிர்பார்க்கப்படும் தமிழ்க்கட்சிகளினதும், ஏனைய கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றுவர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House