
posted 13th March 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சு மேசையில் முன்வைக்கப்போகும் விடயங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடித் தீர்மானிக்கவுள்ளோம் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே ஜனாதிபதியுடனான சந்திப்பு நிகழவேண்டும் என்றும், இல்லாதுவிடின் கூட்டமைப்பை அரசாங்கம் பகடைக்காய் ஆக்கிவிடும். எனவே இந்த சந்திப்பை நிராகரிக்க வேண்டும் என்றும் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் அறிவித்தது.
இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராசா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30இற்கு ஜனாதிபதி எம்மைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றையதினம் காலையில் நாம் சந்தித்துப் பேசவுள்ளோம்.
ஜனாதிபதி கோட்டாபய எம்மைச் சந்திப்பதற்கு முன்பொரு சந்தர்ப்பத்தில் நேர ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு இறுதி நேரத்தில் அந்த சந்திப்பை இரத்துச் செய்திருந்தார். அதன் பின்னர் அவர் சிங்கள, பௌத்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக நின்றார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான நிபுணர்கள் குழுவிடம் எமது பரிந்துரைகளை வழங்கிய பின்னரும்கூட அவர் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டையே அமுலாக்குவதற்கு விளைந்து கொண்டுள்ளார்.
இதனைவிடவும், தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அவர் மௌனமாகவே இருப்பதோடு பயங்கரவாத தடைச்சடத்தை முழுமையாக நீக்குவதையும் விரும்பவில்லை. இவற்றை விடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலை செய்வதற்கும் தயராக இல்லை.
இந்நிலையில், எம்மை அழைத்து என்ன விடயங்களைப் பேசப்போகின்றார் என்ற கேள்விகள் எமக்குள் இல்லாமில்லை. அதேநேரம், அவர் என்ன விடயங்களைப் பேசினாலும் நாம் மேற்படி விடயங்கள் உட்பட எமது மக்கள் அன்றாடம் முகங்கொடுத்து வரும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறே வலியுறுத்தவுள்ளோம். அதற்கான நிகழ்ச்சி நிரலை நாம் எமது சந்திப்பின்போது தாயரிக்கவுள்ளோம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House