சொத்துகளுக்கு சேதம் பண்ணிய சந்தேக நபர் கைது

சொத்துகளுக்கு சேதம் பண்ணிய சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் வீட்டிலிருந்தவர்களை தாக்கி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் 20 வயதுடைய கொக்குவிலை சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் அவர் ஏற்கனவே வாகனம் நகைக்கொள்ளை மற்றும் கொலைமுயற்சி போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவரென தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 29 பேர் விடுவிக்கப்பட்டனர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேர் விடுவிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை சென்னை சென்றடைந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து தமிழகத்தில் உள்ள சொந்த இடங்களுக்கு மீனவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

சொத்துகளுக்கு சேதம் பண்ணிய சந்தேக நபர் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House