
posted 17th March 2022
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகமும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் இணைந்து உடன்பாடுகண்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தொடர்ச்சியான சுகாதார மேம்பாட்டுக் கருத்தரங்குகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ரமீஸ் அபூபக்கரும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாசும் அண்மையில் கலந்துரையாடி, எடுத்த புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம், பல்கலைக்கழக நூலகத்தைக் களமாகக் கொண்ட சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
“மேன்மையான சுகாதாரம்” எனும் தொணிப்பொருளைக் கொண்ட இத்திட்டத்தின் பிரகாரம் தொடர்ச்சியான சுகாதார மேம்பாட்டுக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும், இதன் மூலம் தென்கிழக்கு பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறவுள்ளதாகவும் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாய்டீன் தெரிவித்தார்.
மேன்மையான சுகாதாரம் பேணுதலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த முன்மாதிரி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், முதலாவது கருத்தரங்கும், தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக, கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாய்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி ஜனாபா. சபீனா கஸ்ஸாலி, சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி மசுறூபா மஜீத், பிரதி பிராந்திய பணிப்பாளர் டாக்டர். எம்.பி.ஏ. வாஜித், தலைமையக சுகாதார தகவல், முகாமைத்துவ பொறுப்பதிரகாரி டாக்டர். ஐ.எம். முஜீப், பிராந்திய பற்சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். வாசில் வரீத், பாலியல் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். என்.எம். தில்சான், பிராந்திய ஆயள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். நசீல் தர நிர்ணய முகாமைத்துவப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர். டானியல் உட்பட பலபிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் ஓர் அங்கமாக “மன அழுத்தமில்லா எதிர்காலம்” எனும் தலைப்பில், பிராந்திய உள நலப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர். எம்.ஜே. நௌபல் கருத்தரையும் ஆற்றினார்.
பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் நிகழ்வில் உரையாற்றுகையில்,
“அறிவைப் பரப்பும் நிலையமாகப் பல்கலைக் கழகங்கள் திகழ்வதுடன், நாட்டினதும், சர்வதேசத்தினதும் பிரச்சினைகள், முக்கிய விடயங்களை அலசி ஆராய்ந்து பேசும் தளமாகவும் திகழ வேண்டும்” என்றார்.
உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்களுட்பட பல்கலைக்கழக சமூகத்தினரை வலுவூட்டும் பல்வேறு முன்மாதிரித் திட்டங்களைச் செய்படுத்தி வருவது பெரும் பாராட்டுதல்களைப் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House