
posted 17th March 2022
சிறுவர் தப்பியோடவும், தற்கொலைக்கு முயற்சிக்கவும் பாரதி சிறுவர் இல்லத்தில் நடப்பதுதான் என்ன??
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் இரண்டு சிறுமிகள் அலரி விதையை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
திங்கட்கிழமை (14) இந்த சம்பவம் நடந்தது.
சிறுவர் இல்லத்தை சேர்ந்த 13, 14 வயதான இரண்டு சிறுமிகள் நேற்று முன்தினம் பாடசாலை சென்றனர். பாடசாலையில் வைத்தே அலரி விதையை உட்கொண்டனர்.
முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் அவர்கள் கல்வி கற்கிறார்கள்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுவர் இல்லத்தில் வசிக்கக்கூடிய நிலைமையில்லையென சிறுமிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தம்மை நிர்வாகத்தினர் சரமாரியாக திட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை பொறுக்க முடியாமலேயே அவர்கள் அலரி விதை உட்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரமும் இந்த சிறுவர் இல்லத்திலிருந்து 5 சிறுமிகள் தப்பியோடியுள்ளனர்.
இந்த அதிர்ச்சிச் சம்பவங்களையடுத்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் கண்காணிப்பில் இந்த இல்லம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து நம்நாட்டில் கூலிப்படையை இயக்கும் மர்ம நபர் யார்??
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியை கோப்பாய் பகுதியில் வைத்து வெட்டி காயம் ஏற்படுத்தியவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கோப்பாய் புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சந்தேகநபர், சங்கானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் மேலும் நால்வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் பணம் கொடுத்து கைக்கூலிகளை ஏவி, இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான ஆசிரியர் தேவைதானா? மாணவரே முடிவெடுங்கள்
தென்மராட்சி பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுச் சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சிறுவனுக்கு குறித்த ஆசிரியர் ஓரின பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த நிலையில் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவன் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய அவருக்கு துன்புறுத்தலை ஏற்படுத்திய ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்ஸன், ஆசிரியருக்கு பிணை வழங்கினார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House