
posted 13th March 2022
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் மிகவும் கடும்போக்கில் இருந்தபோதும் அவ்வேளையில் இரு நிர்வாகங்களுக்கு மத்தியிலும் மிகவும் சாதுரியமாக மாணவர்கள் மத்தியில் கல்வியை முன்னெடுத்துச் சென்ற இவ்வாறானவர்களின் செயல்பாடுகள் எதிர்காலத்தில் வளரும் சமூதாயம் அறிந்துகொள்ள ஆவணப்படுத்தப்பட வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
அமரர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஜனாப் அப்துல் ஹக் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மன்னார் நகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (11.03.2022) நினைவு மலர் வெளியீடு செய்யப்பட்டது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட அயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இங்கு தொடர்ந்து தனது உரையில்
அமரர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஜனாப் அப்துல் ஹக் பெயரால் நாம் இன்று இங்கு ஒன்றுகூடியுள்ளோம். அவருடன் இருந்தவர்கள் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அவரைப்பற்றிய பகிர்வை இங்கு எடுத்து கூறியுள்ளார்கள்.
மன்னார் மாவட்டத்தில் கடும் யுத்த சூழ்நிலையில் ஹக் அவர்கள் தனது கல்வி பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார் என்பதை இங்கு பலரும் எடுத்துக்கூறினீர்கள்.
அப்படிப்பட்ட ஒரு கல்விமானை இன்று நாம் நினைவுகூறுகின்றோம். மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்கள் ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில் இவர் கல்வி பணியை மேற்கொண்டுள்ளார்.
ஒரு பக்கம் விடுதலை புலிகளின் நிர்வாகம் மறுபுறம் அரசாங்க நிர்வாகம் இந்த இரு நிர்வாகங்களுக்கு மத்தியிலும் இவர் மிகவும் சாதுரியமாக மிகவும் திறமையாக பணியாற்றி இருக்கின்றார் என்பது பலரின் உரைகளிலிருந்து வெளிச்சமாகின்றது.
இவ்வாறான நல்லவர்கள் வல்லர்களின் செயல்பாடுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய இவரின் இந்த நினைவு மலர் இன்று அதை தாங்கியுள்ளது.
இவ்வாறான நினைவுகள் நூல் வடிவில் வளரும் சந்ததினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். கல்வியாளர் ஹக் அவர்கள் மறைந்து பத்து அண்டுகள் கடந்தும் இன்றும் அவர் நினைவு கூறப்பட்டவராக இந்த மலர் வெளியிடப்பட்டது பாராட்டுக்குரியது என்றார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House