
posted 5th March 2022

மௌலவி எஸ்.ஏ. அசீம்
மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு செய்யப்பட்டபோது எமது பகுதி மக்களுக்கு இது தொடர்பான சரியான விளக்கம் இல்லாமையும் ஏமாற்றப்பட்டதுமே காரணமாக இருக்கின்றது என மன்னார் நகர் பெரிய பள்ளிவாசல் மௌலவியும் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.ஏ. அசீம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழுவினதும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (04.03.2022) மன்னார் நகர சபை கேட்போர் மண்டபத்தில் மன்னார் தீவில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கனியவள மணல் அகலும் பணியில் ஈடுபடும் நிறுவன அதிகாரிகளுக்கும் மன்னார் சகல துறைகளையும் சார்ந்த புத்தி ஜீவிகளுக்கும் இடையே இடம்பெற்ற கருத்தமர்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நகர் பெரிய பள்ளிவாசல் மௌலவியும் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.ஏ. அசீம் அவர்கள் தொடர்ந்து இங்கு கருத்து தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவிலே நாங்களும் காற்றாலைகள் மற்றும் கனியவள மணல் அகழ்வு தொடர்பாக ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்து விட்டோம்.
ஆனால் காலம் தாழ்த்தியே நாங்கள் இதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கிடையில் எவ்வளவோ விடங்கள் நடந்தேறிவிட்டது.
எங்கள் பகுதியான மன்னார் தீவில் புதுக்குடியிருப்பு மக்கள் ஏற்கனவே இது தொடர்பாக விழிப்புணர்வு அற்றவர்களாக இருந்து விட்டார்கள்.
இப் பகுதியில் தனியார் காணியில் இக் களியவள மணல் ஆய்வு செய்யப்பட்டபோது எமக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால், தாங்கள் நல்ல தண்ணீர் சம்பந்தமாக ஆய்வு செய்கின்றோம் என்று. இதை நம்பி நாம் ஏமாற்றப் பட்டோம்.
ஆனால், அன்மையில் நாங்கள் மன்னார் தீவில் கண்ணால் கண்ட விடயம் இரு மணி நேரம்தான் கடும் மழை பெய்தது. அப்பொழுது மன்னார் தீவில் தாழ்வுபாடு தொடக்கம் தலைமன்னார் வரையும் இரு வாரங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கி இருந்தமையை நாங்கள் கண்டுணர்ந்தோம்.
இதற்கெல்லாம் காரணம் இப் பகுதிகளில் மணல் அகற்றப்பட்டு கூழங்கள் மற்றும் அயலிலுள்ள மணல்களால் இவ்விடங்கள் நிரப்பப்பட்டதே என்று அறிந்துகொண்டோம்.
இந்த நிலை தொடருமாகில் மன்னார் தீவானது எமது எதிர்கால சந்ததினருக்கு தக்க வைக்க முடியுமா என்பது எமக்கு கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
இவற்றை கவனத்தில் எடுக்கப்பட்ட நிலையிலேயே நாம் பொது மக்களுக்கு தற்பொழது விழிப்புணர்வை பள்ளிவாசல், ஆலயங்கள் கோவில்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக நாங்கள் இதை ஏற்படுத்தி வருகின்றோம்.
இதன் பிறகுதான் மன்னார் மக்கள் இது விடயமாக தங்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் சம்பந்தமாக விழப்புணர்வு அடைந்து வருகின்றனர்.
ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான மணல் அகழ்வு, காற்றாலைகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மன்னார் தீவில் இடம்பெறக்கூடாது என்பதே எமது மக்களின் நிலைப்பாடாக காணப்படுகின்றது என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House