
posted 26th March 2022
தீர்மானங்கள் எடுக்கும் போது தீர்க்க தரிசனத்துடன் எடுக்க வேண்டும். அவசரமாகவும் ஆவேசமாகவும் எடுக்கப்படும் தீர்மானங்கள் சமூகத்துக்கு வெற்றியை தராது. இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சிக்கு கணிசமான ஓட்டுக்கள் இருந்தால் அக்கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பாடத்தை சமகாலம் பலருக்கு கற்பித்துள்ளது. ஆனாலும் இதை நான் அஷ்ரப் காலம் முதல் சொல்லி வருகிறேன்.
சிறுபான்மை மக்களின் கட்சி அதிக தேசிய பட்டியலுக்கு ஆசைப்பட்டு தனது சொந்த சின்னத்தை விடுத்து பேரின கட்சியில் போட்டியிடுவதை பொல்லை கொடுத்து அடி வாங்குவதாகும்.
இன்றைய பாராளுமன்றத்தில் ஹக்கீமோ, ரிசாதோ அவர்களின் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஹாபிசும் முஷரபுமே அவர்கள் கட்சியின் ஒரே எம்பீக்கள். அதனால் அக்கட்சிகளுக்கான அழைப்பு அவர்களுக்கு போயுள்ளது.
சஜித் அதிக தேசிய பட்டியல் தருவார் என்று நம்பியே இவர்கள் சஜித்தின் கட்சியில் போட்டியிட்டனர். சஜித்தும் தேசிய பட்டியலுக்கு ஆப்பு வைத்து விட்டார்.
slmc acmc தனித்து போட்டியிட்டிருந்தால் அவர்களுக்கு தலா ஒவ்வொரு தேசிய பட்டியல் கிடைத்திருக்கும். ரதன தேரருக்கும் தேசிய பட்டியல் கிடைத்திருக்காது.
பாராளுமன்றத்தில் ஹாபிசும், முஷர்ரபுமே இவர்களது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இக்கட்சிகளின் தலைவர்கள் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தால் தலைவர்களுக்கு அங்கு முன்னுரிமை கிடைத்திருக்கும்.
நாங்கள் எல்லா நிலைகளிலும் சஜித்தின் தீர்மானத்தின் பின்னால் போவது மடமை. இந்த அரசின் உண்மையான எதிரியான தமிழ் கூட்டமைப்பு கூட சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் போது நாங்கள் வரமாட்டோம் என முஸ்லிம் கட்சிகள் மறுத்தமை யதார்த்த அரசியலை புரிந்து கொள்ளாமையாகும்.
சந்திரிக்கா ம. கா தலைவர் ரிசாதையும் அன்றைய மு. கா எம்பிமாரையும் பயன் படுத்தியது போன்று இந்த அரசு ஹாபிசையோ, முசர்ரபையோ இன்னமும் பயன் படுத்தவில்லை. அவ்வாறு பயன்படுத்தினால் இக்கட்சிகள் பல கூறுகளாக உடையும்.
தீர்மானங்கள் எடுக்கும் போது தீர்க்க தரிசனத்துடன் எடுக்க வேண்டும். அவசரமாகவும் ஆவேசமாகவும் எடுக்கப்படும் தீர்மானங்கள் சமூகத்துக்கு வெற்றியை தராது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House