கஞ்சா வைத்திருந்தவருக்கு 50 மணி நேர  சீர்திருத்த கட்டளை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 50 மணி நேர சீர்திருத்த கட்டளை

கஞ்சா பொட்டலத்துடன் கைதானவர் 50 மணி நேரம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உள்ளாகியுள்ளார்.

சட்டவிரோதமாக தன்வசம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீதிமன்றில் தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் வயது குறைந்த குடும்பஸ்தர் ஒருவர் தன் கைவசம் 500 மில்லி கிராம் கஞ்சா பொட்டலம் ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்தபொழுது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை பொலிசார் புதன்கிழமை (02.03.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந் நபருக்கு 50 மணித்தியாலம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உத்தரவு இடப்பட்டது.

இச் சீர்திருத்த கட்டளையை ஏற்றுக்கொள்ள தவறும்பட்சத்தில் 9000 ரூபா தண்டம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இருந்தபோதும் இவ் குற்றவாளி சமூதாய சீர்திருத்த கட்டளையை எற்றுக்கொண்டார்.


நுகர்வோர் சட்டத்தை மீறி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது

மன்னார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மன்னார் பகுதியில் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சில வர்த்தகர்கள் அகப்பட்டுக்கொண்டனர்.

அதவாவது தலைமன்னார் பியர், பேசாலை, சிலாபத்துறை, முருங்கன் மற்றும் பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களிலிருந்து 12 வர்த்தகர்கள் இத் திடீர் சோதனையின்போது அகப்பட்டவர்களாவர்.

இவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை காட்சிபடுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்றமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களாக புதன் கிழமை (02.03.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி பெ. சிவகுமார் முன்னிலையில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் தங்கள் குற்றங்களை எற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா தொடக்கம் 5000 ரூபா வரை நீதிபதியால் தண்டம் விதிக்கப்பட்டது.


தவக்காலம் - நாள் 1

இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கும் நமது வாழ்வில் சிறிது நின்று நிதானமாய் பயணித்து இயல்பான வாழ்வை வாழ அழைப்பது தவக்காலம்.

இறைவனின் அன்பினால் ஈர்க்கப்பட்டு பிறரன்பினால் மலர வேண்டிய நாட்கள் இந்த 40 நாட்கள்.

செபம், தவம், நோன்பு ஆகிய முக்கிய மூன்று நற்செயல்கள் வழியாக இறைவனை நோக்கி பயணிக்க நம்மை அழைக்கும் காலம்.

செபத்தின் வழியாக இறைவனோடு உள்ள உறவில் ஆளப்படுகிறோம்.
நோன்பு இருப்பதன் வழியாக நம்மோடு உள்ள உறவை சரி செய்கிறோம்.
நற்செயல்கள் வழியாக பிறரோடு உள்ள உறவை வளர்த்தெடுக்கிறோம்.

எனவே.. இந்த தவக்காலத்தில்;
இறை வார்த்தைக்கு நம் இதயங்களை திறந்து, உடலை மட்டும் வருத்திகொள்வதல்ல தவக்காலம்.
நம் உள்ளத்தை திருத்திக் கொள்ளவே தவக்காலம் என்பதை உணர்ந்து அர்த்தமுள்ள வகையில் இந்த நாட்களை செலவழிப்போம்.

(கத்தோலிக்க ஆசிரியர்கள் தினமும் உங்களுக்கு வழங்கப்படும் தவக்கால சிந்தனைகளை பயன்படுத்தி இறை உறவில் ஆழப்பட அன்புடன் அழைக்கிறேன். நன்றி)

அருட்சகோதரி றோஜா சேவியர் செல்வி (எவ்.எஸ்.பி.எம்)




மன்னாரில் 02.03.2022 அன்று 6 பேருக்கு கொரொனா தொற்று


மன்னாரில் 02.03.2022 அன்று 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இம் மாதம் (மார்ச்) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 02.03.2022 அன்று முருங்கன் வைத்தியசாலையில் 4 பேருக்கும், நானாட்டான் வைத்தியசாலையிலும் மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்குமே இத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் (மார்ச்) கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 11 ஆக அதிகரித்துள்ளது என பணிப்பாளரின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் (2022) மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் தொகை 773 ஆகவும், இத்துடன் மன்னாரில் மொத்தமாக இதுவரை 3955 கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா வைத்திருந்தவருக்கு 50 மணி நேர  சீர்திருத்த கட்டளை

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House