எரிவாயு சிலிண்டர்களுக்காக சிரமங்களுடன் கியூவில் மக்கள்

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவ்வப்போது விநியோகம் இடம்பெறுவதாலும், பொது மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர்.

குறிப்பாக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறும் போது பல மணி நேரம் நீண்ட கியூ வரிசைகளில் காத்திருந்து பெற வேண்டியுள்ளதுடன், சொற்ப விநியோகத்துடன் எரிவாயு சிலிண்டர்கள் முடிவடைந்து விடுவதால் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டிய அவலமும் நீடித்துவருகின்றது.

இதேவேளை நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவிருந்ததை அறிந்த பொது மக்கள் அதிகாலை ஐந்து மணி முதலே நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் கொண்டுவரப்பட்ட சிலிண்டர்கள் பொலிஸாரின் கண்காணிப்புடன் விநியோகிக்கப்பட்டதுடன், பெரும்பாலானோர் சிலிண்டர்கள் தீர்ந்து விட்டதால், நீண்ட நேரம் கியூ வரிசையில் காத்திருந்தும் ஏமாற்றத்துடனும், கவலையுடனும் வீடு திரும்பியதையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை ஒரு சந்தோஷத்தைத் தருவது, நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 10 இலட்சம் சமயல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களுக்காக சிரமங்களுடன் கியூவில் மக்கள்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House